குளோபல் ஷாட் ஆல்பம்:

09-Jan-2013
1 / 10
ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் காட்டு தீ பரவி எரிந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சாம்பலாகியுள்ளன. நியூசவுத்வேல்ஸ் பகுதியில் எரியும் காட்டு தீயை தீயணைப்பு வீரர் அணைக்கிறார்.
2 / 10
சிரியாவின், டப்டனாஸ் விமானப்படை தளத்தை, கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டதால், அங்குள்ள பின்னிஷ் கிராமத்தை, ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில், கட்டடங்கள் நொறுங்கியுள்ளன.
3 / 10
கம்போடியாவில் கெமர்ரூச் ஆட்சி வீழ்த்தப்பட்டதன் 34-வது வெற்றி விழா நம்பென் நகரில் நடந்தது. இதில் அந்நாட்டு கலாச்சாரத்தை விளக்கும் கலைஞர்களின் நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
4 / 10
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திடக்கோரி நேபாள் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் மகளிர் அமைப்பினர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
5 / 10
பாகிஸ்தானில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. முக்கிய நகரான இஸ்லாமாபாத் நகரில் பகல் நேரத்திலும் சாலைகளை மறைக்கும் அளவிற்கு பனி சூழ்ந்துள்ளது.
6 / 10
ஸ்பெயின் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பாம்பலோனா நகரி்ல் ‌வேலையில்லாதவர்கள் சாக்‌லெட் ஷாப்பில் கழிவாக எஞ்சிய சாக்லெட் சாறினை வாங்கி பருகுகின்றனர்.
7 / 10
இந்தியாவுக்குஎதிரானஒருநாள் தொடரை வென்று, கோப்பையுடன் நாடு திரும்பிய பாகிஸ்தான்அணியினருக்கு லாகூர் விமான நிலையத்தில்உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
8 / 10
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 14ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க மெல்போர்ன் வந்த அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், உடற்பயிற்சி மையத்தில் இளம் ரசிகைகளுக்கு பயிற்சி அளித்தார்.
9 / 10
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கதேச நாட்டு விமான நிலைய ஊழியர்கள் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷகாஜலால் சர்வதேச விமான நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
10 / 10
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்தது. இதில் செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிக்கை வீழத்திய மகிழ்ச்சியி்ல் இத்தாலியின் ரூபர்டா வென்ஸி.
Advertisement