குளோபல் ஷாட் ஆல்பம்:

10-Jan-2013
1 / 12
ஜப்பானின் டோக்யோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், இங்கிலாந்து நடிகை ரோஸ்மன்ட் பைக் ஆகியோர் போட்டோகிராபர்களுக்கு உற்சாக போஸ் கொடுத்தனர்.
2 / 12
அமெரிக்காவின் ஐவோ மாகாணத்திலுள்ள டெஸ் மொய்ன்ஸ் நதியில் மீன் வேட்டையில் ஈடுபட்ட கழுகு.
3 / 12
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் லாவ்ரி உயிரியல் பூங்காவில் தனது 2 வார குட்டியுடன் உற்சாக நடைபோட்ட தாய் யானை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
4 / 12
வங்கதேசம் தலைநகர் தாகாவில் அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கண்ணீர் புகையை வரவழைக்கும் ஸ்பிரேயை அடித்து போராட்டக்காரர்களை கலைத்தனர்.
5 / 12
சீன அரசு ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இடதுசாரி கட்சியினர் குவாங்சூ நகரில் உள்ள பத்திரிகை அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.
6 / 12
ஐரோப்பா கண்டத்திலுள்ள சைப்ரஸ் நாட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனி போர்வையால் மூடப்பட்டது காட்சி அளிக்கும் அந்நாட்டின் அக்ரோஸ் கிராமம்.
7 / 12
லண்டனில் பாப்டா விருதுக்கான தேர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அலைஸ் ஈவ்.
8 / 12
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் தொடரில் இத்தாலியின் சாரா இரானியை வென்ற உற்சாகத்தில் சுலோவேக்கியாவின் டோமினிக்கா சிபுல்கோவா.
9 / 12
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்.
10 / 12
ஹவாய் தீவில் உள்ள கிலாயி எரிமலை, நீண்ட காலமாக புகைந்து கொண்டிருந்தது. தற்போது இந்த எரிமலையில் தீக்குழம்பு வழிந்து, பசிபிக் கடலில் கலக்கிறது.
11 / 12
பாலஸ்தீனத்தில், நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால், மேற்கு கரை பகுதியில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் இரண்டு பேர், பலியாயினர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க படகு விடப்பட்டுள்ளது.
12 / 12
பாலஸ்தீனத்தில், நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால், மேற்கு கரை பகுதியில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் இரண்டு பேர், பலியாயினர்.
Advertisement