குளோபல் ஷாட் ஆல்பம்:

20-Jan-2013
1 / 10
ரஷ்யாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து, குளிர்ந்த நீரில் நீராடும் சடங்கு பின்பற்றப்படுகிறது. மாஸ்கோ செஞ்சதுக்கத்தில், "ஜில்' தண்ணீரில் நீராடிய பெண்கள்.
2 / 10
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகைகள் நடாலி ஜியா, அன்னி பாரிஸி மற்றும் நடிகர் கெவின் பேகான்.
3 / 10
ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவின் பெர்னார்டு டாமிக்கிற்கு எதிரான போட்டியில் விளையாடும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் ஆட்டத்தை படம் பிடிக்கும் அவரது மனைவி மிர்கா.
4 / 10
ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை எதிர்த்து களமிறங்கியுள்ள ஆஸ்திரேலியாவின் பெர்னார்டு டாமிக்கை உற்சாகப்படுத்தும் உள்ளூர் ரசிகைகள்.
5 / 10
இத்தாலியின் கார்டினா அம்பசொவில் நடைபெற்ற மகளிருக்கான அல்பைன் ஸ்கை உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அமெரிக்க வீராங்கனை லின்சே வொன்.
6 / 10
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற மார்டின் லூதர் கிங் ஜூனியரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற குழந்தைகள்.
7 / 10
ஸ்பெயினின் நூஸ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்நாட்டு அரச குடும்பத்தை சேர்ந்த ஜான் குய் உர்டாங்கிரின், மலார்கா கோர்ட்டில் இருந்து தமது தோழியுடன் வெளியேறினார்.
8 / 10
ஐரோப்பாவின் பெரும்பான்மையான பகுதிகளில் பனிபொழிவு ஏற்பட்டு வருகிறது. பிரான்சின் பாரிஸ் நகரில் பனி பொழிவின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
9 / 10
பிலிப்பைன்சின் மணிலாவில் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின.
10 / 10
இந்தோனேசியாவின் பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. ஜகார்த்தா நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை முகாம்களில் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement