குளோபல் ஷாட் ஆல்பம்:

30-Jan-2013
1 / 15
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒளி கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில் 'சிலிண்டர் 2' என்ற பெயரில் இடம்பெற்ற ஒளி அமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
2 / 15
தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் சிறப்பு குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடக்கிறது. தொடக்க விழா நிகழ்ச்சியில் அசத்திய நடன கலைஞர்கள்.
3 / 15
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வரில் துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பொது மக்கள்.
4 / 15
மலேசியா, சாம்பா மாகாணம், குங்யங் ராரா வனப்பகுதியில் 10 யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இறந்து கிடக்கும் தாய் எழுந்து, தன்னைசீராட்டாதா எனகண்ணீருடன் சுற்றிவரும்குட்டி யானை.
5 / 15
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் ஆன்டானியோ நகரிலுள்ள புரட்சி வீரன் பெஞ்சமின் மிலம் சிலையின் துப்பாக்கியில் அழகாக அமர்ந்திருக்கும் பறவைகள்.
6 / 15
சீனாவின் சாங்ஜிங் மாகாணத்திலுள்ள போபிங் நகர் உயிரியியல் பூங்காவில் உற்சாகமாக சுற்றி வரும் பான்டா கரடி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
7 / 15
தொழிற்துறையில் அசூர வளர்ச்சி கண்டு வரும் சீனாவிற்கு காற்று மாசுபாடு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. பீஜிங் நகரத்தில் பகல் நேரத்தில் பனி பொழிவு ஏற்பட்டது போல் உள்ளதால் பொது மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர்.
8 / 15
பெல்ஜியத்தில் டாக்ஸிக்குள் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்ஸி ஓட்டுனர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
9 / 15
எகிப்தின் கெய்ரோ நகரில் அரசுக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுதப் படை போலீசாரின் வாகனத்துக்கு தீ வைத்து ஆர்ப்பரிக்கும் போராட்டக்காரர்கள்.
10 / 15
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பலத்த மழை பெய்த வருகிறது. லிஸ்மோர் நகரில் சாலைகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
11 / 15
இலங்கையின் கொழும்பு நகரில் ஊடகங்களின் மீதான அடக்குமுறையை அரசு நீக்க வேண்டும் என கோரி பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
12 / 15
தாய்லாந்தின் பாங்ஹாங் நகரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்கட்சியினரை விடுதலை செய்யக்கோரி சிவப்பு சட்டை அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர்.
13 / 15
பிரான்சின் லியான் நகரில் உலக கோப்பை உணவு சமைக்கும் போட்டி நடைபெறுகிறது. போட்டியில் உற்சாகமாய் பங்கேற்ற நெதர்லாந்தை சேர்ந்த ரோஸிடா நியட்வெல்ட்.
14 / 15
எகிப்து நாட்டில், மீண்டும் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. கெய்ரோவில், ராணுவ கவச வாகனத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள், அந்த வாகனத்தின் மீது ஏறி மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.
15 / 15
ஈரான் நாடு, சமீபத்தில், பிஷ்கம் என்ற ராக்கெட்டை விண்ணுக்கு ஏவியது. இந்த ராக்கெட்டில், குரங்கு ஒன்று வைத்து அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. விண்வெளிக்கு சென்ற குரங்கு தற்போது மீண்டும் உயிரோடு பூமிக்கு திரும்பியுள்ளது.
Advertisement