குளோபல் ஷாட் ஆல்பம்:

31-Jan-2013
1 / 15
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சர்வதேச மோட்டார் வாகன கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் இடம்பெற்ற ரினால்ட் நிறுவனத்தின் ஆல்பைன் 110-50 கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
2 / 15
கராச்சியில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சியில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த பாகிஸ்தான் மாடல்.
3 / 15
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்க வந்த நடிகை கேட்டி மரா.
4 / 15
ஜெர்மனியின் செர்கெய்ட்டி தேசிய உயிரியியல் பூங்காவில் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டுள்ள நான்கு வெள்ள சிங்கக் குட்டிகள் மற்றும் நான்கு வெள்ளை புலிக் குட்டிகள் ஒன்ரோடு ஒன்று கொஞ்சி விளையாடி மகிழ்ந்தன.
5 / 15
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற 'சூப்பர் மாடல்' பார் ரபெலி.
6 / 15
ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு வரும் எகிப்து அதிபர் முகமது மோர்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அம்னஸ்டி அமைப்பினர்.
7 / 15
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் இடம்பெற்ற ஆயிரம் சி.சி. திறன் கொண்ட அதிவேக மோட்டார் சைக்கிள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
8 / 15
தென்கொரியாவின் கோஹன் நகரில் உள்ள நாரோ வின்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் ஒன்று, விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. முதன்முதலில், தென்கொரியாவிலேயே தயாரிக்கப்பட்டு ஏவப்பட்டுள்ளது இந்த ராக்கெட்.
9 / 15
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் சரசோட்டா நகரில் இரு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையே 200 அடி உயரத்தில் கயிறு கட்டி நடந்த நிக் வாலன்டா அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
10 / 15
வங்கதேச தலைநகர் தாகாவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய எதிர்கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசாரை தாக்க உருட்டு கட்டைகளுடன் செல்லும் எதிர்கட்சி தொண்டர்கள்.
11 / 15
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகர் நிகோலஸ் ஹவுல்ட், நடிகை தெரசா பால்மர்.
12 / 15
பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு பிர்மிங்ஹாமில் சிகிச்சை பெற்று வரும் மாணவி மலாலாவின் புகைப்படத்தை குயின் எலிசபெத் மருத்துவமனை வெளியிட்டது.
13 / 15
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உணவாக வழங்கப்பட்ட நட்சத்திர மீனை விழுங்கிய கடற்பறவை.
14 / 15
போர்ச்சுக்கலின் நசரே பீச்சில் நடைபெற்ற நீர் சறுக்கு போட்டியில் பல அடி உயர அலைகளை லாவகமாக சமாளித்து பார்வையாளர்களை அசர வைத்த அமெரிக்க வீரர்.
15 / 15
எகிப்து தலைநகர் கெய்ரோவில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க கவச உடையணிந்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement