குளோபல் ஷாட் ஆல்பம்:

01-Feb-2013
1 / 11
"மிஸ் யூனிவர்ஸ்' பட்டம் வென்ற அமெரிக்க அழகி ஒலிவா குல்போ, உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் நடைபெற்ற "மிஸ் இந்தோனேசியா' அழகிப்போட்டியில் பார்வையாளராக பங்கேற்று, பட்டம் வென்ற மரியா செலனாவுக்கு கிரீடம் சூட்டி, பாராட்டு தெரிவித்தார்.
2 / 11
சீனாவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. ஜிலின் மாகாணத்தில் மரங்கள் அனைத்தும் பனியால் சூழப்பட்டு வெள்ளி இலைகள் மூளைத்தது போல் காட்சியளிக்கிறது.
3 / 11
தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்று உற்சாக போஸ் கொடுத்த இசைக் குழுவினர்.
4 / 11
ஜெர்மனியின் ஸ்டேன்பர்க் நகரின் அதிகாலை நேரத்து அழகிய தோற்றம்.
5 / 11
அமெரிக்காவின் ஷெல்போர்ன் நகர பொம்மை தயாரிப்பு நிறுவனம் ஒன்று வைரம் பதித்த நான்கரை அடி உயரம் கொண்ட டெடி பியர்ரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 15 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட பொம்மையுடன் போஸ் கொடுக்கும் மாடல்.
6 / 11
டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வையாளர்களை கவர காத்திருந்த மாடல்கள்.
7 / 11
அமெரிக்காவின் இன்டியானா நகரில் கடும் சூறாவளி காற்று வீசியதால், மரங்கள் வேரொடு பெயர்ந்து விழுந்தன. இதனால் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
8 / 11
தென்னாப்ரிக்காவின் பிரிட்டோரியா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, அதே தண்டவாளத்தில் பின்னோக்கி வந்த மற்றொரு ரயில் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் இன்ஜின் டிரைவர் மற்றும் 20 பயணிகள் படுகாயமுற்றனர். 150க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனர்.
9 / 11
வங்கதேச தலைநகர் தாகாவில் அரசுக்கு எதிராக எதிர்கட்சியினர் மேற்கொண்ட போராட்டம் வன்முறையில் முடிந்தது. பல இடங்களில் சாலைகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், பதற்றம் நிலவியது.
10 / 11
சீனாவில், வரும் 10ம்தேதி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு பாம்பு ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஹாங்காங்கில் உள்ள கடைகளில் விதவிதமான பரிசு பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
11 / 11
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், அதி நவீன செயற்கை கோளை(டிடிஆர்எஸ்) விண்ணில் ஏவியது. விண்ணில் உள்ள ஹபுள் தொலைநோக்கி எடுக்கும் படங்களை இந்த செயற்கை கோள்கள் உடனுக்குடன், பூமிக்கு அனுப்பும். புளோரிடாவின் கேப்கெனவரல் ஏவுதளத்திலிருந்து, அட்லஸ் ராக்கெட், செயற்கை கோளை சுமந்து செல்கிறது.
Advertisement