குளோபல் ஷாட் ஆல்பம்:

07-Feb-2013
1 / 15
செர்பியாவின் பெல்கிரேடு நகரிலுள்ள மனநிலை பாதிக்கப்பட்ட பள்ளிக்கு சென்ற அந்நாட்டு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக், அவரது தோழி ஜெலினா ரிஸ்டிக்.
2 / 15
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் நடிகை ஜூலியன் ஹக், ரியான் சீகிரஸ்ட்.
3 / 15
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை கோய்பி ஸ்மல்டர்ஸ், இயக்குனர் லாஸே ஹால்ஸ்ட்ராம்.
4 / 15
வடகிழக்கு இங்கிலாந்தின் சீஹாம் கடற்கரை பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் அலைகள் பல அடி உயரத்து எழுந்தன. பாறை ஒன்றின் மீது மோதி கலங்கரை விளக்கத்தை தாண்டி எழுந்து ஆர்ப்பரிக்கும் அலை.
5 / 15
பக்ரைனின் திராஸ் நகரில் ஜனநாயக நடைமுறைகளை அமல்படுத்த கோரி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.
6 / 15
வட கொரியாவின் அணு ஏவுகணை தொழில்நுட்ப சோதனையை கண்டித்து தென் கொரியாவின் சியோல் நகரில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
7 / 15
சீனாவில் வரும் 10ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டப்படுகிறது. இதையடுத்து பீஜிங் நகரில் வாழ்த்து அட்டை, முகமுடி உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.
8 / 15
சீன புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் சீனர்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவிலும் களைகட்டியுள்ளது. கோலாலம்பூரிலுள்ள பாம்பு கோயிலில் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
9 / 15
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் நாடு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை பறித்து பெற்றுக்கொண்டது. இதை கண்டித்து தெசலோனிக்கி நகரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
10 / 15
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்டில் ஹாங்காங், உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதிய 2015ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்றது. உஸ்பெகிஸ்தான் வீரரின் கோல் முயற்சியை தடுக்கும் ஹாங்காங் கோல்கீப்பர் யாப் ஹங் பய்.
11 / 15
ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் ஆட்குறைப்பு காரணமாக பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் பிரான்சை சேர்ந்த பல்வேறு ஊழியர்களை நீக்கியது. நீக்கப்பட்ட ஊழியர்கள் பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய பார்லிமென்ட் முன்னதாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
12 / 15
டுனிசியாவின் எதிர்கட்சித் தலைவர் சோக்ரி பெலைடு துப்பாக்கியால் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 / 15
1971ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச சுதந்திர போரின் போது போர் குற்றங்கள் புரிந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் தலைவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரி அரசு ஆதரவாளர்கள் பேரணி மேற்கொண்டனர்.
14 / 15
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துக்களை சுகாதார துறை அதிகாரிகள் நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு தீயிட்டு எரித்தனர்.
15 / 15
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பள விகிதத்தை உயர்த்த கோரி போராட்டம் நடைபெற்றது.
Advertisement