குளோபல் ஷாட் ஆல்பம்:

08-Feb-2013
1 / 15
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மாடல்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து வந்து அசத்தினர். நிகழ்ச்சியில் ஒய்யாரமாக நடந்து வந்த அமெரிக்க நடிகை கிம் கர்தசனின் ஒன்றுவிட்ட சகோதரிகள் கென்டால் ஜென்னர் (இடது), கெய்லி ஜென்னர்.
2 / 15
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிவப்பு நிறை ஆடைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த மாடல் ரோஸ்லின் சான்செஸ்.
3 / 15
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை அலைஸ் எங்லர்ட் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.
4 / 15
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை ஜோ டயூச்சு, அவரது தாயார் லியா தாம்சன்.
5 / 15
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரான்ஸ், ஜெர்மனி அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை காண வித்தியாசமான செயற்கை சிகையலங்காரத்துடன் வந்த சிறுவன்.
6 / 15
இங்கிலாந்தில் மலர்ச்செடி நடும் திருவிழா நடைபெறுகிறது. லண்டனிலுள்ள கீவ் ராயல் தாவரவியல் பூங்காவில் மலர்செடிகளை நடும் ஊழியர்.
7 / 15
சீன புத்தாண்டு வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சீனர்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவின் பெனாங் தீவிலுள்ள கெக் லோக் சி புத்த கோவில் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.
8 / 15
கனடாவின் வான்கூவர் நகரில் சர்வதேச படகு கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் ரிமோட் மூலம் இயக்கப்படும் 'வேக் போர்டில்' உற்சாகமாக பயணிக்கும் நாய்.
9 / 15
மலேசிய தமிழ் சங்கம் சார்பில், கோலாலம்பூரில் நடந்த பொங்கல் விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, கலைமாமணி இளசை சுந்தரத்திற்கு, மலேசிய கூட்டுறவுத் துறை தலைவர், சோமசுந்தரம் பொன்னாடை அணிவித்தார்.
10 / 15
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த சூப்பர் மேன் படங்களில் வரும் கியா ஆப்டிமா ஹைபிரட் சோர்ஸ் மாடல் கார்.
11 / 15
டுனிசியாவில் எதிர்கட்சித் தலைவர் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்.
12 / 15
பொருளாதார நெருக்கடி காரணமாக ஸ்பெயின் அரசு விவசாயிகளுக்கான பல்வேறு சலுகைகளை ரத்து செய்தது.
13 / 15
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்திலுள்ள ஜெப்பர்சன்வில்லேவில் பனிமூட்டம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் மூன்று பேர் பலியாயினர். அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
14 / 15
வட கொரியா விரைவில் மூன்றாவது ஏவுகணை சோதனை செய்ய உள்ளதாக வெளியான தகவலை அடுத்து தீவு ஒன்றில் ராணுவ ஒத்திகை மேற்கொண்ட தென் கொரிய படையினர்.
15 / 15
சுவீடனுக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டியில் பந்தை தட்டிச் செல்ல தயாராகும் அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்ஸி.
Advertisement