குளோபல் ஷாட் ஆல்பம்:

21-Feb-2013
1 / 12
இந்தோனேஷியாவில், தென்னை மரங்களில் ஏறி இளநீர்களை பறித்துப் போடுதல் உள்ளிட்ட பணிகளை குரங்குகள் அங்கு செவ்வனே செய்து வருகிறது. இதற்காக சுமத்ரா பகுதியின் படாங் பரியாமன் பகுதியில் விற்பனைக்காக உள்ள குரங்கு.
2 / 12
வடகொரியா நிகழ்த்திய அணுஆயுத சோதனை, சர்வதேச நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சோதனையை நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு பியாங்யாங் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கும் மக்கள்.
3 / 12
செர்பியாவில் பதப்படுத்தப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பாலில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருட்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ள நிலையில், பெல்கிரேடை அடுத்த டொபோனோவ்சி பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணையில், போட்டோவிற்கு அழகுற போஸ் கொடுக்கும் கோமாதா.
4 / 12
பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பின் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி இலக்கை நோக்கி புயலென செல்லும் வீரர்கள்.
5 / 12
அமெரிக்கான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கெய்த்வில்லி உயிரியல் பூங்காவில் சிங்கநடை போட்டு செல்லும் சிம்பன்சி குரங்குகள்.
6 / 12
துபாய் டியூட்டி ப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ள நிலையில், துபாயில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டார்.
7 / 12
ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ராணுவ ஆயுத கண்காட்சியில் இடம்பெற்றுள்ள 1594ம் ஆண்டில் புழக்கத்தில் இருந்த ராணுவ ஆயுதம்.
8 / 12
இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வரும் மிலன் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் நவநாகரீக ஆடைகளை அணிந்து வலம் வந்த மாடல் அழகிகள்.
9 / 12
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில், நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் சட்டவல்லுனர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 / 12
தைவான் தலைநகர் தைபேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரம்பரிய நடனமாடி அசத்திய தைவான் நடனக் கலைஞர்கள்.
11 / 12
பெல்ஜியம் நாட்டின், பிரசல்ஸ் நகர விமான நிலையத்தில், நேற்று முன்தினம், சுவிட்சர்லாந்து விமானத்தில் கொண்டு @பாக இருந்த, பல கோடி ரூபாய் பெறுமான வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து, விமான நிலையத்தை சுற்றித் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடக்கிறது.
12 / 12
போர் காலங்களில், காட்டில் தங்கியிருக்கும் போது, எதிர்கொள்ள வேண்டிய சூழல் குறித்து, ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்க ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தாய்லாந்தின், சதாஹிப் காட்டு பகுதியில், தாங்கள் பிடித்த பாம்புகளை கொன்று, அதன் தோலை மாலையாக போட்டுள்ளார் இந்த வீரர்.
Advertisement