குளோபல் ஷாட் ஆல்பம்:

22-Feb-2013
1 / 11
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில், கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கொட்டும் பனிப்பொழிவிலும, தனது அன்றாடப்பணியை மேற்கொள்ள விரையும் பெண்.
2 / 11
உலக தாய்மொழி தினத்தையொட்டி, கோல்கட்டாவில் வங்கதேசத்தினர், தங்கள் மொழிக்கு மரியாதை செலுத்துவதற்காகஊர்வலம் சென்றனர்.
3 / 11
ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், இனிய அதிகாலைப் பொழுதில் கருமேகஙகள் சூழ்ந்திருக்கும் நேரத்தில் வாக்கிங் செல்லும் மக்கள்.
4 / 11
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை அடுத்த புறநகர்ப் பகுதியில், மழைச் சாரலையும் பொருட்படுத்தாமல், கழுதை வண்டியில் அமர்ந்து விளையாடி மகிழும் இளஞ்சிறார்கள்.
5 / 11
தென் கொரியாவில் புத்தாண்டு பிறந்து, இன்றுடன், 15 நாட்கள் ஆகின்றன. புத்தாண்டை தினமும் கொண்டாடி மகிழும் அந்நாட்டினர், இன்று பவுர்ணமியை முன்னிட்டு, விமரிசையான விருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதை முன்னிட்டு, சியோலில், நேற்று வண்ண பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்த குழந்தைகள்.
6 / 11
ஸ்பெயின் பார்சிலோனாவில் விரைவில் துவங்க உள்ள பார்முலா ஒன் பந்தயத்திற்காக வந்துள்ள பிரிட்டனைச் சேர்ந்த மெக்லாரன் வீரர் ஜேன்சன் பேட்டனை மொய்க்கும் அவரது ரசிகைகள்.
7 / 11
இத்தாலியின் வால் டி பிளெம்மி நகரில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் வெற்றிவாகை சூடிய வீரர்கள்.
8 / 11
விரைவில் நாசா சார்பில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட உள்ள சோலார் இம்பல்ஸ் ஹெச்.பி-எஸ்.ஐ.ஏ, சுவிட்சர்லாந்து நாட்டின் பயேர்னி ஏர்போர்ட்டில் சோலார் இம்பல்ஸ், போயிங் 747 விமானத்தில் ஏற்றப்பட்டது.
9 / 11
இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வரும் நவநாகரீக ஆடைகள் கண்காட்சியில், புதுவகை உடைகளை அணிந்து வலம்வந்த மங்கைகள்.
10 / 11
சிரியாவின் அலெப்போ சர்வதேச ஏர்போர்ட் அருகே, ராணுவத்தினரால் வீசப்பட்டு வெடிக்காமல் கிடக்கும் ராக்கெட். ராணுவம் நடத்திய தாக்குதலில், அங்கு தினமும் பலர் பலியாகிவருவது குறிப்பிடத்தக்கது.
11 / 11
தினமும் சூரியன் உதிப்பது போல், சிரியா நாட்டில் குண்டுவெடிப்புகளும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. ஆளும் பாத் கட்சி தலைமையகம் அருகே, நேற்று நடந்த பயங்கர குண்டுவெடிப்பில், கார்கள் தீப்பற்றி எரிகின்றன. படுகாயமடைந்த ஒருவரை, வீரர்கள் எடுத்து செல்கின்றனர்
Advertisement