குளோபல் ஷாட் ஆல்பம்:

05-Mar-2013
1 / 10
வெனிசூலா அதிபர் ஹியுகோ சாவெசின் உடல்நலம் குறித்த உண்மையான தகவலை வெளியிடக் கோரி தலைநகர் கராகசில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெனிசூலாவின் தேசிய கொடியை உதட்டில் பூசிய படி போராட்டத்தில் பங்கேற்ற பெண்.
2 / 10
மலேசியாவின் கோலாலம்பூர் பூங்கா ஒன்றில் உணவாக கிடைத்த ரொட்டி துண்டை தூக்கிக் கொண்டு ஓடும் குரங்கு.
3 / 10
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற வடிவமைப்பாளர் ஸ்டெல்லா மெக்கார்ட்னியின் பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது போட்டோகிராபர்களுக்கு உற்சாக போஸ் கொடுக்கும் நடிகை ஜெசிகா ஆல்பா.
4 / 10
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பேஷன் ஷோவிற்கு வந்திருந்த ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ரிபெக்கா வாங்.
5 / 10
பெல்ஜியம் நாட்டின், கென்ட் நகர பள்ளி குழந்தைகளுக்கு மரங்களை நேசிக்கும் படி, ஆசிரியர்கள் கற்பித்துள்ளனர். இதையடுத்து பள்ளி சிறுவர்கள், ஒரு மரத்துக்கு ஆடை அணிவித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
6 / 10
லண்டனிலுள்ள மன்னர் 7ம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராணி 2ம் எலிசபெத், உடல்நிலை தேறியதை அடுத்து அரண்மனைக்கு திரும்பினார்.
7 / 10
ஆப்ரிக்க நாடான கென்யாவில், நேற்று பொதுத்தேர்தல் நடந்தது. நைரோபி நகரில், ஏராளமான வாக்காளர்கள்,ஓட்டளிக்க ஆர்வமுடன் அதிகாலையிலேயே குவிந்துவிட்டனர்.
8 / 10
நேபாளத்தை சேர்ந்த இந்த ஏழு பெண்கள், உலகில் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்து வருகின்றனர். ஏற்கனவே, இவர்கள், எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு விட்டனர். இதே போல ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய சிகரங்களிலும் ஏறி சாதனை படைத்துள்ளனர். தற்போது ஆப்ரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ சிகரத்தின் மீது ஏறுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
9 / 10
ஜப்பானின் ஹொகைடோ பகுதியில் கடும் பனி பொழிவு காணப்படுகிறது. இதனால், சாலையில் நின்றிருந்த வாகனங்கள், பனி குவியலில் புதையுண்டன. வாகனங்களை மீட்கும் பணி நடக்கிறது.
10 / 10
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் இருந்த பல கட்டிடங்கள் சேதமடைந்தன.
Advertisement