குளோபல் ஷாட் ஆல்பம்:

17-Mar-2013
1 / 10
பெலாரஸ் நாட்டில் கடும் பனிப் புயல் காரணமாக, வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பனிப் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வாகன நெரிசல்.
2 / 10
ஜெர்மனியின் லீப்சிக் நகரில், சர்வதேச புத்தக கண்காட்சி நடக்கிறது. 43 நாடுகளைசேர்ந்த, 2,000க்கும் அதிகமான நிறுவனங்கள், இந்த கண்காட்சியில் அரங்குகளைஅமைத்துள்ளன. ஒரு அரங்கில் வாசகர் புத்தகங்களை தேர்வு செய்கிறார்.
3 / 10
வாடிகன் நகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள போப் பிரான்சிஸ் கூடியிருந்த திரளான மக்கள் கூட்டத்தினர் மற்றும் பத்திரிகை நிருபர்கள் ஆகியோர் முன் உரையாற்றினார்.
4 / 10
ஆப்கானிஸ்தானில் குளிர்காலத்தில் நாய்ச்சண்டை பிரபலமாக உள்ளது. இதனையடுத்து தலைநகர் காபூல் அருகே உள்ள ஆர்கன்தாப் நகரில் நாய்சண்டைக்காக நாயை அலங்கரித்து தயாராக உள்ளார் ஆப்கானியர் ஒருவர்.
5 / 10
ஈஸ்டர் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட முட்டைகளை விற்பனைக்கு வைத்துள்ளார் ஜெர்மன் விற்பனையாளர் ஒருவர்.
6 / 10
சிரியா நாட்டின் அதிபருக்கு எதிர்ப்புதெரிவித்து பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிரியா மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7 / 10
கென்யா நாட்டில் கடந்த 4-ம் தேதி நடைபெற்ற பொது தேர்தலின் போதுவன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில்வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.
8 / 10
ஈராக்கில் ஓட்டோமான் சுல்தான் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது .இதனால் கடந்தபத்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய போர் சூழ்நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது.
9 / 10
ரஷ்யாவில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கடும் பனி பொழிவு நிகழ்ந்து வருகிறது. தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை பூஜ்யம் டிகிரிக்கும் குறைவாக சென்றுவிட்டது.
10 / 10
நேபாள நாட்டில் ஹில்ராஜ்ரெக்மி தலைமையிலான இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி ஆதரவாளர்கள் தலைநகர் காட்மாண்டுவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.