குளோபல் ஷாட் ஆல்பம்:

19-Mar-2013
1 / 10
வடக்கு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரிலுள்ள பனி சூழ்ந்த பூங்காவில் தாகம் தீர்த்துக் கொள்ள வந்த பிளமிங்கோ.
2 / 10
ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலன்டே.
3 / 10
அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற பரிபாஸ் டென்னிஸ் தொடரில் டென்மார்க்கின் கரோலின் வேஸ்னியாக்கியை வீழ்த்தி ரஷ்யாவின் மரியா ஷரபோவா கோப்பை வென்றார். கோப்பையுடன் ஷரபோவா (வலது), வேஸ்னியாக்கி.
4 / 10
ஹாங்காங் திரைப்பட விழாவில் பங்கேற்று ஒய்யார போஸ் கொடுக்கும் மாடல் ஜெசிகா.
5 / 10
எகிப்தில் அரசு படைகளால் கொல்லப்பட்ட தமது உறவினர் ஒருவரின் புகைப்படத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்.
6 / 10
எகிப்து நாட்டின், சமனோட் என்ற இடத்தில், ஆட்டோரிக்ஷாவை திருடியதாக பிடிபட்ட இரண்டு பேரை, அப்பகுதி மக்கள் தலை கீழாக தொங்க விட்டு அடித்து கொன்றனர்.
7 / 10
பெருவின் லிமா நகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் கைக் குழந்தையுடன் ஆர்வமாய் வாக்களித்த பெண்.
8 / 10
கம்போடியாவின் நாம் பென் நகரிலுள்ள பியாங் தோம் ஏரியில் குடிநீர் சேகரிக்கும் சிறுமி.
9 / 10
அமெரிக்காவின் ஐயோவா பகுதியில், சிறிய விமானம் ஒன்று குடியிருப்பு மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருவர் பலியாயினர். தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
10 / 10
ஆப்ரிக்க நாடான மாலியில், பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில், பிரான்ஸ் நாட்டு படையினர் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் வைத்த கண்ணிவெடியில், பிரான்ஸ் வீரர் ஒருவர் பலியானார். இதையடுத்து, அத்ரார் என்ற இடத்தில், வீரர்கள் நடந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement