குளோபல் ஷாட் ஆல்பம்:

22-Mar-2013
1 / 10
அர்ஜென்டினாவின் பியூனோஸ் ஏரிஸ் உயிரியல் பூங்காவில் உள்ள கண்ணாடி ஒன்றில் தனது அழகை பார்த்து மகிழும் பெண் வங்கப்புலி.
2 / 10
இங்கிலாந்தின் கேன்டர்பெர்ரியின் புதிய ஆர்சிபிஷப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஸ்டின் வெல்பியை இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா சந்தித்துப் பேசினர்.
3 / 10
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள ஒலிமபிக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பெடரல் போலீஸ் படைப்பிரிவின் பாதுகாப்பு ஒத்திகையில், 2 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாயின. அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.
4 / 10
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வரும் யு.எஸ். ஆல்பைன் ஸ்கை பெண்கள் பனிச்சறுக்கு தொடரில் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறும் அமெரிக்க வீராங்கனை மிக்கேல்லா ஷிப்ரின்.
5 / 10
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின், மான்ட்கோமெரி பகுதியில், நேற்று முன்தினம் புயல் வீசியது. இதை தொடர்ந்து அங்குள்ள தேவாலயத்தின் மீது மின்னல்கள் முற்றுகையிட்டன.
6 / 10
பாரசீக புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆப்கானிஸ்தானின், காபூல் நகரில், மலை மீதுஉள்ள புனித தலத்தில் வழிபட, ஏராளமான மக்கள் திரளாக சென்றனர்.
7 / 10
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இயங்கி வரும் அகதிகள் முகாமை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் காயமடைந்த கழுதையை, வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் மக்கள்.
8 / 10
மியான்மர் நாட்டில் முஸ்லீம்களுக்கும் புத்தமதத்தினருக்கும் இடையே நடந்த கலவரத்தில், நான்கு பேர் பலியாயினர். கலவரத்தில் தீக்கிரையான வீடுகள்.
9 / 10
ஜெர்மனியில் அதிவேக ஆற்றல் உலைகள் அமைக்கப்பட இருப்பதை கண்டித்து தலைநகர் பெர்லினில் நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.
10 / 10
மலேசியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கான பயிற்சி, மழை காரணமாக தடைபட்டுள்ளது.
Advertisement