குளோபல் ஷாட் ஆல்பம்:

26-Mar-2013
1 / 10
சிங்கப்பூர் வனவிலங்கு பாதுகாப்பு பகுதியில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய விலங்குகளை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நீண்ட வால் கொண்ட மகாவு குரங்கு.
2 / 10
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற எய்ட்ஸ் ஹெல்த்கேர் அமைப்பினர்.
3 / 10
ரஷ்யாவில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. பனி சூழ்ந்த மாஸ்கோவின் ரெட் ஸ்கொயர் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டது.
4 / 10
லண்டனில் நடைபெற்ற ஜேம்ஸ்சன் எம்பயர் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜென்னா கோல்மேன்.
5 / 10
அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை ஜெனிபர் லோபஸ், காஸ்பர் ஸ்மார்ட்.
6 / 10
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் பாரம்பரிய நடனமாடிய கலைஞர்கள்.
7 / 10
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள கீ பிஸ்கேன் டென்னிஸ் தொடரில் சகநாட்டு வீராங்கனை எலினா வெஸ்னினாவை வீழ்த்திய உற்சாகத்தில் மரியா ஷரபோவா.
8 / 10
கிரீஸின் தெசலோனிக் நகரில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் மிடுக்குடன் அணிவகுத்து சென்ற ராணுவ வீரர்கள்.
9 / 10
மியான்மரின் மெய்டிக்லா நகரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
10 / 10
இந்தோனேசியாவின், ஜாவா தீவில் பெய்த பலத்த மழையால்,சிலின் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. 20க்கும் அதிகமானவர்கள் புதையுண்டனர். இதுவரை ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மீட்பு பணிகள் தொடர்கின்றன.
Advertisement