குளோபல் ஷாட் ஆல்பம்:

29-Mar-2013
1 / 11
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சினிமா சூட்டிங்கில் பங்கேற்க வந்த நடிகர் டாம் க்ரூஸ் ரசிகர், ரசிகைகளுக்கு உற்சாகமாக ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.
2 / 11
சுவீடனின் கோட்போர்க் நகரில் மகளிர் கால்பந்து சாம்பியன்ஸ் லீக் நடைபெறுகிறது. காலிறுதி போட்டியில் கோட்போர்க் அணியின் அன்னா அக்ல்ஸ்டிரான்டிடம் இருந்து பந்தை தட்டிச் செல்லப் போராடும் ஜூவிசிஸ் அணியின் ஜூலி சோயர் (வலது).
3 / 11
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள கீ பிஸ்கேன் நகரில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் சாரா இரானிக்கு எதிரான போட்டியின் இடையே பயிற்சியாளரின் ஆலோசனைகளை கேட்டபடியே கண்களை மூடி தியானம் செய்யும் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா.
4 / 11
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகைகள் சோபிய டர்னர் (இடமிருந்து), மெய்சி வில்லியம்ஸ், நடாலி டோர்மர்.
5 / 11
தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் ஹூன்டாய் நிறுவனம் எச்.என்.டி. 9 வெனஸ் ரக காரை அறிமுகப்படுத்தியது. காருடன் உற்சாக போஸ் கொடுக்கும் மாடல்கள்.
6 / 11
ஜப்பானில் வசந்த காலம் துவங்கியுள்ளதையடுத்து செர்ரி மரங்கள் பூத்து குலுங்கி வருகின்றன. டோக்யோ நகர செர்ரி மரத்தின் வசிகரத் தோற்றம்.
7 / 11
பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கொலம்பிய பாடகி ஷகீராவை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்கள் வெள்ளத்திற்கு மத்தியில் உற்சாக போஸ் கொடுத்த ஷகீரா.
8 / 11
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள கூப்விலே பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் மக்கள் குடியேற்றம் பெரியளவில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
9 / 11
போர்ச்சுக்கல்லின் லிஸ்பன் நகரில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியாக சென்றவர்கள் வலதுசாரி அரசின் கொள்ளைகளை விமர்சித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 / 11
பெருவின் அரகுய்பா பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று மலையில் இருந்து கீழே விபத்துக்குள்ளானது. இதில் 24 பேர் பலியாயினர். போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
11 / 11
சீன தைபேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உற்சாக போஸ் கொடுத்த பாடகிகள் செலினா, எலா, ஹெபே.