குளோபல் ஷாட் ஆல்பம்:

04-Apr-2013
1 / 7
பிரேசில் ரியோ -டி-ஜெனிரோ பகுதியில், சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்று 30 அடி உயரத்தில் இருந்து திடீரென கவிழ்ந்தது. இதில் 7 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
2 / 7
ஜெர்மனியில், இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட, 100 கிலோ எடையுள்ள வெடிகுண்டு, பெர்லின் நகர ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டது. வெடிகுண்டை செயலிழக்கச் செய்வதற்காக, அப்பகுதியில் ரயில் போக்குவரத்து, நேற்று தடை செய்யப்பட்டது.
3 / 7
வட கொரியா தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதால், தென் கொரியாவின் சியோல் நகரம் அருகே உள்ள பியோங்டிக் விமானப்படை தளத்தில், அமெரிக்க போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.
4 / 7
ஜப்பானின் டோக்கியோவில் நடந்த நகை விற்பனை கண்காட்சியில்,120 கிலோ எடையுள்ள தங்க நகைகள், பொருட்கள் இடம் பெற்றிருந்தன.அதில் 4.2 கிலோ எடையுள்ள தங்க ரோஜாக்களை பார்வையாளர்களுக்கு காண்பித்த விற்பனையாளர்.
5 / 7
வடகொரியா, தென் கொரியா இடையே எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் நிலவுகிறது. தென் கொரிய ராணுவவாகனங்கள், பீரங்கிகள் ஆகியவை, எல்லைப்பகுதியில் அணிவகுத்துள்ளன. வட கொரிய இலக்குகளை நோக்கிதாக்கும் வகையில், தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தென் கொரிய பீரங்கிகள்.
6 / 7
ஸ்பெயினின் பர்கோஸ் பகுதியில் அந்நாட்டின் உயர்ந்த நீர்வீழ்ச்சியான சால்டோ டெல் நெர்வியான் உள்ளது. கடும் வெள்ளத்தின் போது மட்டும் தான் இங்கு நீரின் வீழ்ச்சியை காண முடியும். சமீபத்தில் பெய்த மழையை அடுத்து நீர்வீழ்ச்சியை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
7 / 7
ஜெர்மனியில் வரலாறு காணாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. அங்கு அம்மெர்சி ஏரி முழுவதுமாக உறைந்து வரும் நிலையில், அதில் நீந்தி மகிழும் வாத்துக்கள்.
Advertisement