குளோபல் ஷாட் ஆல்பம்:

08-Apr-2013
1 / 10
ஜாப்பானில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. கேசத்தை கலைத்துவிடும் பலத்த காற்றுக்கு இடையே சிரித்தபடி செல்லும் இளம்பெண்கள்.
2 / 10
போர்ச்சுக்கல்லின் மாடோசின்கோஸ் நகரில் நடைபெற்ற 'கலர் ரன்' எனப்படும் வித்தியாசமான ஓட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வண்ண பொடிகள் துவப்பட்டது.
3 / 10
யுனிசெப் அமைப்பின் தூதரும், அமெரிக்க பாடகியுமான கேட்டி பெர்ரி மடகாஸ்கரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆம்பிபோயானா நகரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றி பார்த்த அவர் ஆரம்பப் பள்ளி ஒன்றில் அடி பம்பில் தண்ணீர் சேகரித்தார்.
4 / 10
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் உள்ள யாஷினோ செர்ரி மரத்தில் பூக்கும் சீசன் தொடங்கியுள்ளது. இதையடுத்து ஏராளமான பறவைகள் மரத்தில் துளைகள்யிட்டு கூடு கட்டி வருகின்றன.
5 / 10
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை ஜோ போஸ்டர்.
6 / 10
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற வயலின் இசைக் கலைஞர் மிரி பென்.
7 / 10
உக்ரைனின் கீவ் நகரில் எதிர்கட்சியினர் சார்பில் நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் முன்னாள் பிரதமர் யுலியா டிமோஷென்கோவின் படம் பொறித்த பேனருடன் கலந்து கொண்டனர்.
8 / 10
கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. தென் கொரியாவின் சியோலில் உள்ள மியூசியத்தில் வட கொரியாவின் ஸ்கட்- பி (நடுவில்), மற்றும் தென் கொரிய ஏவுகணைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
9 / 10
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பள்ளி இடைவேளையின் போது கூடைப்பந்தை வைத்து கைப்பந்து விளையாடும் மாணவிகள்.
10 / 10
எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரசு படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் கலவரமாக மாறியது. இதையடுத்து ராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டினர்.