குளோபல் ஷாட் ஆல்பம்:

15-Apr-2013
1 / 10
இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராணுவ வீராங்கனைகள்.
2 / 10
இலங்கையின் கொழும்பு நகரில் பிறந்துள்ள புத்தாண்டாவது தங்களுக்கு அமைதியான ஆண்டாக அமையட்டும் என இறைவனை பிரார்த்திக்கும் தமிழ் மூதாட்டி.
3 / 10
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர கடுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நியூ ஜெர்சியிலுள்ள டாம்ஸ் ரிவர் பகுதியில் 4 வயது சிறுவன் துப்பாக்கியை எடுத்து தவறுதலாக சுட்டதில் 6 வயது சிறுவன் பலியானான். இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் சோகத்துடன் காணப்பட்ட பலியான சிறுவனின் குடும்பத்தினர்.
4 / 10
மறைந்த வட கொரிய அதிபர் இரண்டாம் கிம் சங்கின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியின் பெண்கள் பிரிவில் அந்நாட்டு வீராங்கனை கிம் மி கியாங் முதலிடம் பிடித்தார்.
5 / 10
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கிறிஸ்டினா ஆப்பிள்கேட்.
6 / 10
பெருவின் லிமா நகரில் நடைபெற்ற கஜோன் திருவிழாவில் பங்கேற்று ஆடிப்பாடிய ஆப்ரிக்க வம்சாவளியை சேர்ந்த பெரு குடிமக்கள்.
7 / 10
மலேசியாவில் ஆண்டுதோறும் சாங்கிரன் என்றழைக்கப்படும் தண்ணீர்த் திருவிழா நடைபெறுகிறது. கோலாலம்பூரில் தந்தை மீது தண்ணீரை பீச்சடித்து மகிழும் சிறுவன்.
8 / 10
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹவுஸ்டனில் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. அங்கு கடும் வெயில் காரணமாக வீரர்கள் விரைவில் சோர்ந்து போயினர். அமெரிக்காவின் ஜான் ஹஸ்னருக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு இடையில் ஓய்வெடுத்த அர்ஜென்டினா வீரர் ஜூவன் மொனாகோ.
9 / 10
சீனாவின் ஷாங்காய் நகரில் சைனிஸ் பார்மூலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் நடைபெற்றது. துவக்க விழாவில் பங்கேற்ற மாடல்கள் போட்டி தொடங்கியுடன் ரிலாக்சாக பேசி மகிழ்ந்தனர்.
10 / 10
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் மன்னராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள்.
Advertisement