குளோபல் ஷாட் ஆல்பம்:

22-Apr-2013
1 / 11
போஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின்னர் அங்கு நடைபெற்ற முதல் பேஸ்பால் போட்டியை காண வந்த ரசிகை ஒருவர் போஸ்டன் மக்களின் மன உறுதியை குண்டுவெடிப்பு சம்பவங்கள் குலைத்துவிடாது எனும் வகையில் 'போஸ்டன் ஸ்ட்ராங்' என்ற வாசகத்தை முகத்தில் வரைந்து வந்தார்.
2 / 11
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள டென்வர் நகரில் தடை செய்யப்பட்ட மரிஜூவானா போதை பொருளுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரி இளைஞர்கள் உடலில் டாட்டூ வரைந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 / 11
ஈகுவடார் தலைநகர் கியுட்டோவில் பெண் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்ட பெண்கள்.
4 / 11
அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கபோலய் பகுதியில் எல்.பி.ஜி.ஏ. கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஹவாயின் பாரம்பரிய நடனமான ஹூலா நடன கலைஞர்களுடன் ஆட்டம் போடும் நார்வே வீராங்கனை சூசன் பீட்டர்சன்.
5 / 11
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள டெல்ரே பீச்சில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் அந்நாட்டின் ஸ்லோன் ஸ்டீபன்சை வென்ற மகிழ்ச்சியில் சுவீடன் வீராங்கனை சோபியா அர்விட்சன்.
6 / 11
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 24வது கிளாட் மீடியா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜெனிபர் லாரன்ஸ்.
7 / 11
சீனாவின் ஷாங்காய் நகரில் சர்வதேச மோட்டார் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சி வைக்கப்பட்டிருந்த கியா கே 9 ரக கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
8 / 11
லண்டன் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் வெப்பத்தை போக்கிக் கொள்ள நீரில் நனைந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
9 / 11
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் இன்டியோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி ஜென்னி லூயிஸ் இசை மழையால் ரசிகர்களை நனைத்தார்.
10 / 11
பெல்ஜியத்தின் கோக்ஜிட்சி நகரில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் அந்நாட்டு வீராங்கனை கிர்ஸ்டன் பிலிப்கென்சை, போலந்தின் அக்னிஸ்கா ரட்வன்ஸ்கா வீழ்த்தினார். ரட்வன்ஸ்காவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் கிர்ஸ்டன் பிலிப்கென்ஸ்.
11 / 11
சீனாவின், யான் நகரில், குங்ரென் பகுதியில், பூகம்ப இடிபாடுகளில் சிக்கி தவித்த, முதியவரை, மீட்பு குழுவினர் தூக்கி செல்கின்றனர்.