குளோபல் ஷாட் ஆல்பம்:

23-Apr-2013
1 / 10
தென் கொரியாவின் சியோல் நகரில் சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பவுன்டைன்களுக்கு மத்தியில் அழகாக ஓடும் சிறுவன்.
2 / 10
பிலிப்பைன்சின் மணிலா நகரில் நடைபெற்ற மிஸ் பிலிப்பைன்ஸ் எர்த் போட்டியில் பங்கேற்ற அழகிகள்.
3 / 10
நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் நடிகைகளாலும் சாதிக்க முடியும் என்பதை இங்கிலாந்து டி.வி. நடிகை அமி சைல்ட்ஸ் நிரூபித்துள்ளார். லண்டன் மராத்தான் போட்டியில் இலக்கை எட்டி சாதித்த அமி சைல்ட்ஸ்.
4 / 10
அமெரிக்காவின் போர்ட்லாண்ட் நகரில் தேசிய பெண்கள் கால்பந்து கோப்பை போட்டி நடைபெறுகிறது. போர்லாண்ட் தார்ன்ஸ் அணி வீராங்கனையிடம் (சிவப்பு), இருந்து பந்தை தட்டிச் செல்லப் போராடுகிறார் சியட்டில் ரீகைன் வீராங்கனை.
5 / 10
கனடாவின் ரெஜினா நகரில் நடைபெற்ற ஜூனோ காலா விருது வழங்கும் விழா நடைபெற்றது. விருது வென்ற மகிழ்ச்சியில் பாடகி செரினா ரைடர்.
6 / 10
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் டெல்ரே பீச்சில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவீடனின் ஜோகன்னா லார்சன், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சிடம் தோல்வியடைந்தார். பந்தை திருப்பியனுப்பும் ஜோகன்னா.
7 / 10
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ரீஸ் விதர்ஸ்பூன், நடிகர் மேத்திவ் மேக்காக்ஹே.
8 / 10
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இசை மழை பொழிந்த அந்நாட்டு பாடகி ஈவா சிம்மன்ஸ்.
9 / 10
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற சுலோவேகியா அணிக்கு எதிரான பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரஷ்ய அணி 3-2 என்ற போட்டிக் கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி உற்சாகத்தை பகிர்ந்து கொள்ளும் ரஷ்ய வீராங்கனைகள் எகட்ரினா மகரோவா, எலினா வெஸ்னினா (இடது).
10 / 10
அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள நீரில் மூழ்கியுள்ள லாகிரான்ச் நகரில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement