புகைப்பட ஆல்பம்:

நீலம் புயலின் கோரத் தாண்டவம்
1 / 16
பனிபடர்ந்தது போல்: நீலம் புயலால், சென்னை துறைமுகம், காசிமேடு மற்றும் திருவொற்றியூர் கடல் பகுதிகளில் அலைகள், அதிக வேகத்துடன் கரைப்பகுதிகளை தாக்கியது. புயல் காற்றால் துறைமுகமே கண்ணில் தெரியாத அளவுக்கு, பனிபடர்ந்தது போல் காணப்பட்டது.
2 / 16
தடுப்பைத் தாண்டிய அலைகள்: நீலம் புயலால், ஏற்பட்ட சீற்றத்தால், திருவொற்றியூர் பகுதியில் கடல் அலைகள் தடுப்புக் கற்களை தாண்டி பாய்ந்தது.
3 / 16
முதல்வர் வீட்டிற்கு செல்லும் வழியில்: முதல்வர் வீட்டிற்கு செல்லும் வழியில், மரங்கள் சாய்ந்ததால் பரபரப்பு... நீலம் புயல் காரணமாக பலத்த காற்று சென்னையில் வீசியது. இதனால், போயஸ் கார்டனில் இருபுறம் உள்ள சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால், முதல்வர் வீட்டுக்கு செல்ல காலதாமதம் ஏற்பட்டது.
4 / 16
சாலையில் சாய்ந்த மரம்: நீலம் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால், அயனாவரத்தில் மரம் ஒன்று வேரோடு சாலையில் சாய்ந்தது.
5 / 16
பாலத்தில் மழை நீர்: வியாசர்பாடி கணேசபுரம் பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
6 / 16
மணல் பரப்பு முழுவதும் ஆக்கிரமிப்பு: நீலம் புயல் காரணமாக, சென்னை மெரீனாவில் கடல் தண்ணீர் மணல் பரப்பு முழுவதும் ஆக்கிரமித்து கொண்டது.
7 / 16
மெரீனாவில் கடும் அலை சீற்றம்: நீலம் புயலால் சென்னை மெரீனாவில் கடும் அலை சீற்றமாக அர்ப்பரித்த காணப்பட்டது.
8 / 16
மரங்கள் வேரோடு சாய்ந்தன.:

திருப்போரூர் பகுதியில் புயல் காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.


9 / 16
பழைய வீடு இடிந்தது: சென்னை, புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் கன மழையின் காரணமாக பழைய வீடு இடிந்து மின் கம்பத்தின் மீது விழுந்தது.
10 / 16
சோகத்தில் தாயும் மகனும்: பலத்த காற்றால் செங்குன்றம் கிராண்ட்லைன் திருவள்ளுவர் தெருவில், தங்களது குடிசை வீட்டின் மீது விழுந்த பெரிய ஒதிய மரத்தால், வீடு சேதமாகி விட்டதை சோகத்துடன் பார்க்கும் தாயும் , மகனும்.
11 / 16
சாய்ந்த புளியமரம்.:

அம்பத்தூர் அருகே சென்னை- திருவள்ளூர் சாலையில் தனியார் மருத்துவமனை முன்பு சாய்ந்த புளியமரம்.


12 / 16
முறிந்து விழுந்த மரம்.:

சென்னை, ஷெனாய்நகர் திரு.வி.க., பூங்கா அருகே மேற்கு கிளப் சாலையில் முறிந்து விழுந்த மரம்.


13 / 16
கார் மீது விழுந்த மரம்.: சென்னை, அண்ணாநகர் மேற்கு, 16வது பிரதான சாலையில் கார் மீது விழுந்த மரம்.
14 / 16
சாய்ந்த மரம்.:

சென்னை அண்ணாநகர் மேற்கு, 16வது பிரதான சாலையில் தனியார் மருத்துவமனை கட்டடம் மீது சாய்ந்த மரம்.


15 / 16
அடியோடு விழுந்த மிகப் பெரிய மரம்.:

புயல் காற்றால் சென்னை அண்ணாநகர் "எச்' பிளாக் பகுதியில் வீட்டின் சுற்றுச் சுவரை பெயர்த்துக்கொண்டு அடியோடு விழுந்த மிகப் பெரிய மரம்.


16 / 16
கரையைக் கடந்தபோது...: மாமல்லபுரம் பகுதியில் நீலம் புயல் கரையைக் கடந்தபோது ஆர்ப்பரித்து வந்த அலைகள்