நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

19-ஏப்-2018
1 / 10
வாங்கிட்டோம்ல..!: அட்சய திருதியை முன்னிட்டு சென்னை மகாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவிலில் குருவாயூர் கிருஷ்ணன் உருவம் பதித்த தங்க டாலர் விற்பனை செய்யப்பட்டது.
2 / 10
நல்ல விளைச்சல்..!: உடுமலை கண்டியகவுன்டன்புதூர் வயல்களில் பயிரிடப்பட்டுள்ள கம்பு பயிர்கள்.
3 / 10
குறைஞ்சு போச்சே...!: கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை இல்லாததால் பழநி பாலாறு பொருந்தலாறு அணையில் தண்ணீர் குறைந்து வருகிறது.
4 / 10
அப்பாடா வந்துருச்சு...!: சென்னைவாசிகள் கோடை வெயிலை சமாளிக்க விற்பனை வந்துள்ள குழாய் வைத்த மண்பானைகள். இடம்.கோடம்பாக்கம், சென்னை.
5 / 10
ஆச்சர்யம்...!: உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, திருச்சி ரயில்வே மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள பாரம்பரிய ரயில் கீ ஆர்டரை ஆர்வத்துடன் பார்வையிட்ட பள்ளி மாணவிகள்.
6 / 10
காய்த்து தொங்குதே...!: உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் அருகே மரத்தில் காய்த்து தொங்கும் அத்திப்பழம்.
7 / 10
ரம்மியம்... !: வானுயர்ந்த மேற்குதொடர்ச்சி மலை தென்னைகளுடன் ரம்மியாக காட்சி தரும் வயல்பகுதிகள்.இடம்: ராஜபாளையம் அருகே சாஸ்தாகோயில் அணைப்பகுதி.
8 / 10
பழுத்திடுச்சே..!: கோவை சிறுவாணி வனப்பகுதியில் மரத்தில் பழுத்துள்ள அத்திப்பழங்கள்.
9 / 10
பாதைய மாத்து..!: வால்பாடைறயிலிருந்து பள்ளிமேடு வழியாக கேரளா வனப்பகுதிக்கு இடம் பெயரும் யானைகள்.
10 / 10
துளிருடுச்சு...!: வால்பாறையில் கோடை மழையால் கவாத்து வெட்டப்பட்ட தேயிலை தோட்டங்களில் இளம் தளிர் துளிர் விடத்துவங்கியுள்ளது.இடம்: ஸ்டேன்மோர் எஸ்டேட்.
Advertisement