நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

30-Jun-2013
1 / 5
வாய் விட்டு சிரித்தால்...!: விளையாட்டு போட்டியில் வென்ற களிப்பல்ல, இந்த சிரிப்பு... உடல் களைப்பு, மன இறுக்கத்தை போக்கும், சிரிப்பு தான். கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நேற்று நடந்த யோகா பயிற்சியின் ஒரு பகுதியாக, மெய்மறந்து சிரித்து ஆரவாரம் செய்கின்றனர் போலீசார்.
2 / 5
பயபக்தி: ராஜ்யசபா தேர்தலின் போது, ஓட்டுகள் எண்ணும் அறையில் அமர்ந்திருந்த அ.தி.மு.க., வேட்பாளர் அர்ஜுனன், தான் வெற்றி பெற்றதை அறிந்ததும், சட்டைப்பையில் வைத்திருந்த அம்மன் படத்தை எடுத்து பய பக்தியுடன் வணங்கினார்.
3 / 5
எல்லையை தொட்ட காவிரி: காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து, ஒகேனக்கல் மறு கரைப்பகுதியான கர்நாடகா மாநில, மாறுகொட்டாய் பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிகளில் குதித்து, மேட்டூருக்கு பெருக்கெடுத்து செல்லும் காவிரி நீர்.
4 / 5
விழிப்புணர்வு: சென்னை மாநகராட்சியினர் டெங்கு இல்லா சென்னையை உருவாக்குவதை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொது மக்களிடம் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகளுக்காக மாநகராட்சியினர் பெரிய பேனர்களை தயார் செய்து இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்கின்றனர்.இடம்:வேப்பேரி
5 / 5
உடையும் நிலையில்...: சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள் நாட்டு முனையம் கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட நிலையில் பயணிகள் வருகையில் உள்ள கண்ணாடிகள் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
Advertisement