நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

14-Jul-2013
1 / 5
புறக்கணிக்கும் மாணவர்கள்: அரசின் இலவச திட்டங்களை புறக்கணிக்கும் மாணவர்கள்...! பெரும்பாலான அரசின் இலவச திட்டங்கள் அனைத்தும், முறையான பயனாளிகளுக்கு சென்றடைவதே இல்லை. இப்படி இலவசங்களை கொடுத்து, ஆக்க சக்திகளை முடக்குவதை விட, முறையான கல்வி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதே பலரின் கருத்து. தன் மகனின் இலவச பையை சுமந்து செல்லும், தந்தையின் கருத்தும் இது தான். இடம் - சென்னை அண்ணா சாலை.
2 / 5
வாட்சிங் டவர் அமையுமா !: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனத்தின் மையப்பகுதியான, இட்டரை என்ற இடத்தை, ”ஜீரோ பாய்ண்ட் என்பர். இங்கிருந்து கோடநாடு, பவானிசாகர் அணையின் முழுதோற்றம், வனவிலங்குகளின் நடமாட்டத்தை பார்க்க வசதியாக, வாட்சிங் டவர் அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பள்ளத்தாக்கில் சேகரமாகும் நீர், பவானிசாகர் அணைக்கு முழுமையாக சென்றடைகிறது.
3 / 5
பயணிகளுக்கு விருந்து: கொடைக்கானலில் கடநத சில நாட்களாக சாரல் மழையுடன், மேக மூட்டம் நிலவுவதால் சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
4 / 5
போவோமா ஜாலிவாக் : உயர்ந்து வளர்ந்த பசுமை மரங்கள் ; அதன் மீது தவழும் பனி மேககூட்டங்கள், இதன் நடுவே, அமைதியான கரும்பாதை ; ஜிலு...ஜிலு... காற்று நம் உடலில் தடவிச்செல்ல, இயற்கையின் அழகை ரசித்தவாறு இந்த பாதையில் ஒரு ”வாக் சென்றால் எப்படி இருக்கும் ? படத்தை பார்க்கும்போதே உடல் சிலிர்க்கிறதா ? ( இடம் : டாப்சிலிப் - பொள்ளாச்சி )
5 / 5
விளையாடிய பாம்புகள்: திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள ஜம்மனை பள்ளத்தில் இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி, பிணைந்து விளையாடிய காட்சியை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
Advertisement