நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

31-Jul-2013
1 / 5
முதன்முறையாக மலர்க்கண்காட்சி: நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழாவையொட்டி இந்த ஆண்டு முதன்முறையாக மலர்க்கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. இதனை கல்லூரி மாணவிகள் கண்டுகளித்தனர்.
2 / 5
முழு நம்பிக்கையுடன்: மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து முழு நம்பிக்கையுடன் தஞ்சாவூரில் பகுதிகளில் நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
3 / 5
சணல் வலை விரித்து: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவை தடுக்க, சணல் வலை விரித்து, தாவரங்களை வளர்க்கும் முயற்சி, நல்ல பலன் அளித்துள்ளது.
4 / 5
ஊக்கு வழங்குகின்றனர்: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் மூலவரை தரிசிக்க வரிசையில் செல்லும் பெண் பக்தர்களுக்கு, நகை பாதுகாத்து கொள்ள போலீசார் ஊக்கு வழங்குகின்றனர்.
5 / 5
மாறவில்லை படியின் பிடியில்: போலீஸார் பலமுறை எச்சரித்த பிறகும் கோவை மற்றும் சென்னையில் பஸ்களில் படியில் பயணம் செய்வது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
Advertisement