நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

07-Sep-2013
1 / 5
வருண பகவான் கருணை!: காவிரியில் தண்ணீர் வருவதாலும், அவ்வப்போது வருண பகவான் கருணை காட்டுவதாலும், தஞ்சாவூர் சூரக்கோட்டை அருகே, நடவு பணியில், மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ள விவசாய பெண்கள்.
2 / 5
எங்கே போவார்கள்?: சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் குளிக்க, துணிகளை துவைக்க, 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக, நோயாளிகள் தெரிவித்தனர். அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகள், பெரும்பாலும் ஏழைகள். இவர்களிடம் இப்படி அநியாயமாக காசு பிடுங்கினால், எங்கே போவார்கள்?
3 / 5
கழுகுப் பார்வை...!: கழுகுகளை பாதுகாக்க வலியுறுத்தி, கோவை போத்தனூர் ரயில்வே பள்ளி மாணவர்கள், கழுகு வடிவத்தில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
4 / 5
முதன்முறை பயணம்!: ஊட்டிக்கு மலைரயிலில், முதன்முறையாக பயணம் செய்த திம்பம் பகுதி பழங்குடியின மாணவர்கள்.
5 / 5
வந்துட்டார் விநாயகர்...: திருப்பூர் மாவட்டம் உடுமலை இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரதிஷ்டை செய்ய கொண்டு வரப்பட்டுள்ள வண்ண சிலைகள்.
Advertisement