நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

11-Sep-2013
1 / 5
தாயை காத்த தனயன்: நோய்வாய்ப்பட்டு நடக்க இயலாத தமது தாயை, சக்கரங்கள் பொருத்திய மரப்பலகையில் வைத்து நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றான் இந்த சிறுவன். தாயுடன் ஒட்டிக்கொண்டு பயணிப்பது அவனது தங்கை..!
2 / 5
'நீல....வானம்....:: கடந்த 11 நாட்களுக்குப் பின் கொடைக்கானலில் நேற்று பகலில் மழை பெய்யவில்லை. மேகங்கள் விலகி, நீலவானம் அழகாக காட்சியளித்தது.
3 / 5
நிற்கும் போதுமா...: ரோட்டில் "பாயும்' போதும், பறக்கும் போதுதான் விபத்து ஏற்படுகிறது என்றால், சிக்னலில் நிற்கும் போதும் விபத்து நடந்தால், பயணிகள் என்னதான் செய்வார்கள்? நின்ற லாரியில் மோதி, கண்ணாடிகளை பறிகொடுத்த இந்த பஸ்சில், பயணிகளுக்கு காயம் ஏற்படாதது மட்டுமே ஆறுதல். இடம்: காளவாசல் சிக்னல், மதுரை.
4 / 5
தீபங்கள் பேசும்....: பந்தலூர் அருகே சேரம்பாடி விநாயகர் கோவிலில் நடந்த லட்சதீப வழிபாடு.
5 / 5
தண்டனை கிடையாதா?: திருப்பூரில் போக்குவரத்து விதிமுறையை மீறுவது சர்வ சாதாரணமாகி விட்டது. இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்வதே தவறு. அதிலும், கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் வண்டியையும் இழுத்துச் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில், ஒரு போலீஸ்காரர் கூட, இதை கவனிக்கவில்லையா?
Advertisement