நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

30-Apr-2015
1 / 10
மொய் விருந்து: மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடப்பதையொட்டி மொய் விருந்து நடக்கும். அதற்காக மதுரை சேதுபதி பள்ளியில் காய்கறிகள் வெட்டும் பணியில் நேற்று ஈடுபட்ட பெண் பக்தர்கள்.
2 / 10
திருச்சூர் பூரம்: கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் நடந்த குடைமாற்றம் நிகழ்ச்சியை, பல்லாயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்ந்தனர்.
3 / 10
ரம்மியம்: அதிகாலையில் சூரியன் தன் பணியை துவங்கும் முன்னோட்டமாக வானில் செங்கதிர்களை பாய்ச்சியது ரம்மியமாக காட்சியளிக்கிறது. நேரம்: அதிகாலை 5.50 மணி, இடம்: சில்வார்பட்டி.
4 / 10
சீறிப்பாயும் சிற்றருவி: கோடை மழையால், வால்பாறை வாட்டார்பால் எஸ்டேட் பகுதியில், தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் சீறிப்பாயும் சிற்றருவி.
5 / 10
மலர் கண்காட்சி: மூணாறு மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த காய்கறிகளால் செய்யப்பட்ட பறவை உருவங்கள்.
6 / 10
பசுமை: கோடை சீசனை முன்னிட்டு, ஊட்டி தாவரவியல் பூங்கா புல்தரையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 'பச்சை பசேல் என காட்சியளிக்கும் புல்தரையில், மே 1 முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்' என்று பூங்கா நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
7 / 10
வெறிச்!: கோத்தகிரி கோடநாடு காட்சிமுனை, வன விலங்குகள் நடமாட்டம் காரணமாக, சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
8 / 10
வாசிக்க காத்திருக்கும் நன்றியுள்ள ஜீவன்...: சேலம் அரிசிபாளையம் தெப்பகுளம் அருகே உள்ள திருமால் நூலகத்தில் புத்தகங்களை படிக்க மனிதர்களுக்கு மத்தியில் அப்பகுதியில் சுற்றி திரியும் நாய் ஒன்றும் நாள் தவறாமல் ஆஜராகி விடுகிறது.
9 / 10
மஞ்சள் குடை விரித்த மலர்கள்...: ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் மட்டுமே பூக்கும் மஞ்சள் வண்ண சரக்கொன்றை மலர்கள் தற்போது பூத்துக்குலுங்குகிறது. சேலம் பிருந்தாவன் ரோட்டில் உள்ள கொன்றை மரம் மஞ்சள் வண்ண பூக்களை திராட்சை கொத்துக்களை போல் சரம் சரமாக மரம் முழுவதும் பூத்து குலுங்கி பெரிய குடை போல் காட்சியளிக்கிறது.
10 / 10
தவிர்த்திருக்கலாமே!: இலவச சைக்கிள்தானே என எண்ணி சரக்கு வாகனத்தில் அதிகளவு ஏற்றி செல்வதை தவிர்க்கலாமே.இடம்: சிவகங்கை - திருப்புத்தூர் ரோடு
Advertisement