நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

19-Jun-2012
1 / 5
வீழ்ந்தாலும் அழகு!: பருவமழைச் சாரலின் ஸ்பரிசத்தால் மயங்கி உதிர்ந்த மலர்கள், மண்ணில் மவுனமாய் உறங்குகின்றன. இடம்: கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம்
2 / 5
தோள் மீது தோள் சாய்ந்து..: முதல்வர் தலைமையில் சென்னையில் நடந்த விழாவில், திருமணம் செய்து கொண்ட ஜோடிகள், விழா நடந்த பந்தலுக்கு அதிகாலையிலேயே அழைத்து வரப்பட்டதால், முதல்வர் வருகைக்கு முன்பு வரை ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.
3 / 5
இது, குடிமகன் ஏரியா...: பல லட்சம் ரூபாய் செலவழித்து மெரீனா கடற்கரையை அழகுபடுத்தினால், புல்வெளிப் பகுதியில், மது குடித்தவர்கள் மயங்கிக் கிடங்கின்றனர். இந்த "குப்பைகளை' யார் அகற்றுவது...?
4 / 5
கடல் சீற்றம்: ஒடிசா- தமிழகம் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் சென்னையில் மிதமான வானிலை நிலவியது. மெரினாவில் சீற்றம் அதிகமாக காணப்பட்ட கடலில் விளையாடிய இளம்பெண்கள்.
5 / 5
தெம்பு கிடைச்சிருச்சு!: பல நாட்களாக பட்டினி கிடந்து, எலும்பும், தோலுமாக உள்ள இந்த நாய், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்து மரத்தடி ஒன்றில் கிடந்த பேப்பர் கப்பில், எஞ்சியிருந்த "டீ'யை ருசித்து, வயிற்றை நிரப்பியது.
Advertisement