நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

05-Dec-2012
1 / 5
அதிசயம் ஆனால் உண்மை: காவிரி டெல்டா மாவட்டங்களில், காவிரி நீர் இல்லாமல் பயிர்கள் கருகி வரும் வேளையில், திருச்சி மாநகரப்பகுதியில், உறையூர் திருத்தாந்தோணி சாலை அருகே, கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பச்சைப் போர்வை விரித்தாற்போல் நெற்பயிர்கள் வளர்ந்திருக்கும் கண்கொள்ளா காட்சி.
2 / 5
"ஜங்புட்' சுவைக்காக காத்திருப்பு: சுற்றுலா பயணிகள் சாலையில் வீசும் திண்பண்டங்களை ருசிப்பதற்காக, மசினகுடி அருகே,சாலையோர மரத்தில் "எதிர்பார்ப்புடன்' காத்திருக்கும் நீலகிரி லாங்கூர் குரங்குகள்.
3 / 5
மழை.. மழை...: வங்கக் கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வால், சென்னையில் நேற்று வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து, கனமழை பெய்வது போல தோன்றினாலும், மாலை வரை, லேசான மழையே பெய்தது. இடம்: பட்டினப்பாக்கம்.
4 / 5
இதுவன்றோ நன்றிக்கடன்...: ஒரு ரூபாய் நாணயம் அளவுள்ள நெருஞ்சி மலரில், குறிஞ்சித் தேனை உறிஞ்சத் தேடும் இந்தத் தேனீ, நன்றிக்கடனாக உடல் முழுவதும் ஒட்டியுள்ள, மகரந்த தூளை மற்ற மலர்களுக்கு எடுத்து சென்று புதிய பூவிற்கு வித்திடுகிறது. இடம்: போடி அருகே.
5 / 5
யாரிடம் சொல்ல ?: ஊரிலுள்ள பிரச்னைகள் குறித்து கலெக்டரிடம் பொதுமக்கள் முறையிடுவர்; கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிரச்னையை எங்கு முறையிடுவது?... கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், தூய்மை பணிக்கு மர இலைகளையே துடைப்பமாக பயன்படுத்தும்அவல நிலை உள்ளது.
Advertisement