நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

25-Dec-2012
1 / 5
சிக்னலுக்கு சிக்னல்: சிக்னலுக்கு சிக்னல் கப்பம் கட்ட வேண்டும்... தலையில ஹெல்மெட் இல்லேன்னா... அது சாதாரண மக்களுக்குத்தானே...! இவங்களே விழிப்புணர்வு செய்வாங்க... ஏமாந்தவுங்க கிட்ட அபராதம் விதிப்பாங்க. ஆனா இவங்க மட்டும் ஹெல்மெட் போட மாட்டாங்க...! நல்லா பாருங்க எத்தன பேர் ஹெல்மெட் போடலேன்னு...! இடம் -திருவல்லிக்கேணி, சென்னை.
2 / 5
தும்பிக்கையில் நம்பிக்கை...: முதுமலை புலிகள் காப்பகத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள குட்டியானை ரங்காவுடன், அதன் தோழி காவேரி நாள்தோறும் வந்து விளையாடி உற்சாகப்படுத்தி வருகிறது.
3 / 5
இது ஏனோ புரியவில்லை: கடந்த சில மாதங்களுக்குமுன் இரவு நேரத்தில் சென்ற இரு சக்கர வாகன ஒட்டி வேகத்தடை தெரியாமல் கீழே விழுந்து இறந்து போனார் . அதே போல் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை வேகத்தடை மற்றும் வளைவுகள் நிறைந்து காணப்படும் சாலைகள் இருந்தும் அங்கெல்லாம் வர்ணம் பூசும்பணியை செய்யாமல் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி உள்ள தனியார் உணவு விடுதிக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு வர்ணம் பூசும் போக்குவரத்து போலீசார்.
4 / 5
கிறிஸ்துமஸ் பண்டிக்கைகு ஜொலிக்கும் சர்ச்சுகள்:: வண்ண அலங்கார விளக்குகளால் கிறிஸ்துமஸ் மரங்களுடன், நுழைவாயிலில் புதிதாக நிறுவப்பட்ட குழந்தை ஏசு சொருபத்துடன், ஜொலிக்கும் "குழந்தை ஏசு' பேராலயம்..இடம்: சேலம்
5 / 5
அதிகாரிகளால் அவதிப்பட்ட பக்தர்கள்: வைகுண்ட ஏகாதசியின் சொர்க்க வாசல் திறப்பு சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் நேற்று நடந்தது. இதில் வழக்கத்துக்கு மாறான அதிகாரிகளின் செயல்களால், கடவுளின் அருளை பெற இரவு முதல் காத்திருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அதிகாரிகளின் அலட்சியத்தால் பெரும் அவதிக்குள்ளாகி வெறுத்துச் சென்றனர்.
Advertisement