நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

26-Dec-2012
1 / 5
மீண்டும் பழசு:: தற்போது தொடரும் மின்தடையால் பம்ப் செட் வைத்து தண்ணீரை பாய்ச்ச முடியாத நிலை உள்ளது.இருக்கும் தண்ணீரை வைத்தாவது பயிர்களை காப்பாற்றுவோம் என இரவை மூலம் தண்ணீர் பாய்ச்சும் சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டை விவசாயிகள்.
2 / 5
பொங்கல் வரவு...: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் சிதம்பரம் பகுதியிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து துவங்கியுள்ளது.இருபது கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.விளைச்சல் அதிகமாக உள்ளதால் பண்டிகை நெருக்கத்தில் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
3 / 5
ஜல்லிக்கட்டுக்கு தயார்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் அடுத்த அலங்காநத்தத்தில் நடக்கவுள்ள ஜல்லிகட்டுக்காக அப்பகுதி இளைஞர்கள் தங்களது காளை மாடுகளுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4 / 5
கோடி ரூபாயில் திருப்பணி: ஆற்காட்டு நவாப் படையெடுப்பின் போது சிதைக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகள்பழமையான தேவனூர் திருநாகீஸ்வரமுடைய நாயனார் கோவிலில் 95 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5 / 5
உற்சாகம்: முதுமலை புலிகள் காப்பகத்தில் வெயிலின் தாக்கத்தை தணிக்க யானைகள் தும்பிக்கையால் சேற்று நீரை உடலில் தெளித்து கொள்கின்றன. (அடுத்தபடம்) உடல் முழுவதும் சேற்று நீர் படும் வகையில், படுத்துஉருளும் யானை.
Advertisement