நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

27-Dec-2012
1 / 5
தள்ளு வண்டி:

அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "தள்ளு வண்டி' மாடல் பஸ். இதற்கு டீசல் தேவையில்லை. தள்ளிகிட்டே ஊர் போய் சேர்ந்திடலாம் போல... இடம்: தேனி குன்னுர் ரோடு.


2 / 5
நிழல் ஏக்கம்:: சுற்றுச்சூழல் கெடுக்கப்பட்டதால், சுருண்டு படுத்துக்கொண்டது பருவ மழை. வறட்சியால் வாடிய மரங்களுக்கிடையே நிழல் தேடி வந்த இந்த கார் ஒதுங்க இடமின்றி, இலைகள் உதிர்ந்து, நரம்பு மண்டலம் போல் உள்ள மரத்தை, வருத்தத்துடன் கண்ணாடி கண்களால் பார்க்கிறதோ...இடம்:மதுரை, கலெக்டர் அலுவலகம்.
3 / 5
அழகை ரசிக்கலாமா..?: வால்பாறையில் மார்கழி மாதம் கடுங்குளிர் நிலவும் நிலையில், கண்ணுக்கும், மண்ணுக்கும் குளிர்ச்சியூட்டும் "வாடாமல்லி பூ' சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
4 / 5
ஆறுதல்:

ஆறு ஆண்டுகளுக்கு முன், "சுனாமி' தினத்திற்கு முதல் நாளில், இந்த அழகியநான்கு குழந்தைகளும், சென்னை தம்பதிக்கு, ஒரே பிரசவத்தில் பிறந்தன.ஒவ்வொரு ஆண்டும், "சுனாமி' நினைவு தினத்தின் போது, நான்கு குழந்தைகளும்மெரீனா கடற்கரைக்கு வருவது வழக்கம். "சுனாமி' சோகத்தை சுமந்தவர்கள், இந்த குழந்தைகளை பார்த்து ஆறுதல் அடைவதும் உண்டு.


5 / 5
வாடகைக்ககு ...:

நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு வருவோர் அணிவதற்காக அருகே செயல்படும் டீக்கடைகளில் காக்கி சட்டைகள் வாடகைக்ககு விடப்படுகிறது.


Advertisement