நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

10-Jan-2013
1 / 5
பசி வந்தால்...: தாகம் எடுத்த போது பாத்திரத்தில் கல்லை போட்டு காக்கை தண்ணீர் குடித்த கதையை கேட்டிருக்குமோ இந்த ஆடு. இடம்: காரைக்கால்
2 / 5
ஒருவர் மீது, ஒருவர் சாய்ந்து...: சமத்துவம் சகோதரத்துவத்தை அனைவரும் வலியுறுத்தி வரும் இந்த வேளையில், இந்த காட்சி தத்தூருபமாக அமைந்து விட்டது. இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் சிந்தித்துபார்த்தால் நலமே.
3 / 5
ஜொலி... ஜொலிப்பு...: கடலூர் அண்ணாபாலம் சிக்னல் அருகே நகராட்சி சார்பில் 5 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று வண்ணமயமாக ஜொலிக்கிறது.
4 / 5
சுகாதாரம்... ரொம்ப தூரம்...: பள்ளிப்பட்டு ஒன்றியம் கர்லம்பாக்கத்தில் உள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படாததால், வீடுகளில் தேங்கும் கழிவு நீரை, பெண்கள் பாத்திரத்தில் எடுத்து தெருவில் கொட்டுகின்றனர். சுகாதாரத்துக்கும் எங்களுக்கும் ரொம்ப தூரம் என்கின்றனர் இந்த மக்கள்.
5 / 5
தேன் மரம்...: ஒவ்வொரு ஊரின் பெயருக்கும் ஒரு காரணம் இருக்கும். இந்த ஊரின் பெயருக்கு தேன் கூட்டில் தேனீக்கள் மொய்ப்பது போல் தேனீ கூடுகள் மொய்த்துள்ள இந்த மரமே சாட்சி. இடம்:தேனி.
Advertisement