நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

22-Jan-2013
1 / 5
உற்சாக நடனம்...: கோவை, வெள்ளலூரிலுள்ள நிர்மல் மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
2 / 5
ஒற்றை யானை...: பந்தலூர் நாயக்கன்சோலை கிராமத்துக்கு செல்லும் சாலையோரத்தில் உலா வரும் ஒற்றை யானை.
3 / 5
வேண்டுதல்...: தை கிருத்திகையை முன்னிட்டு சென்னை பாடி திருவலிதாயம் (குருஸ்தலம்) திருவல்லீஸ்வரர் கோயிலில் "தங்கமயில் வாகன சேவை' நடந்தது.இதில் திரளான பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
4 / 5
பசு பிரச்னை தீர்ந்தது...: குறை தீர் கூட்டத்தில் மனுக்களுக்கு பிரச்னை தீர்கிறதோ... இல்லையோ... குப்பைத்தொட் டியில் குவியும் பேப்பரால், இரை தேடும் மாடுக்கு "பசி பிரச்னை' தீர்கிறது. இடம்: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம்.
5 / 5
'தொட்டுப்பார்க்க ஆசை..!': திருநெல்வேலி அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் விஷமுறிவு பாடத்திற்காக பாம்புகளை நேரடியாக காண்பித்தபோது தொட்டுபார்த்துக்கொண்ட மாணவிகள்.
Advertisement