நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

25-Jan-2013
1 / 5
கழுத்து வலிக்குதே...: அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் , கடுமையான பெட்ரோல், டீசல் விலையுயர்வை உணர்த்தும் வகையில், மாட்டு வண்டியில் ஆட்டோவை கொண்டு வந்தனர். இடம்:திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே.
2 / 5
தாய் மண்ணே வணக்கம்: .நாளை கொண்டாட உள்ள குடியரசு தினத்தை போற்றும் வகையில், திருச்சி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி மாணவிகள், தங்களது தேசியக்கொடி போல மூவர்ணம் தீட்டியிருந்தனர்.
3 / 5
தண்ணீரை தேடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் நிலவும் வறட்சியால், அய்யம்பாளையம் மருதாநதி அணை வற்றி குளம் போல் உள்ளது.
4 / 5
நம்பிக்கை: கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை விவேகானந்தரின் புகழை பரப்பும் விதமாக, மூன்று சக்கர சைக்களில் யாத்திரை மேற்கொண்டுள்ள மாற்றுத்திறனாளி தங்கராஜ். இடம்: பரமக்குடி ஓட்டப்பாலம்.
5 / 5
பொழப்பு போச்சே: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக பயன்பட்ட அச்சு இயந்திரம் தொடர் மின்தடையால், தொழில் நசிந்து பழைய இரும்பு காயிலான் கடைக்கு செல்ல பெயர்த்து எடுக்கப்படுகிறது. '
Advertisement