நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

28-Jan-2013
1 / 5
பிளாஸ்டிக் எமன்...: உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக் பயன்பாடு, உடல் நலத்திற்கு தீங்கானது என, நன்கு தெரிந்திருந்த போதிலும், ஈரோடு பகுதி டீக்கடைகளில், கொதிக்க கொதிக்க டீ, சாதாரண பிளாஸ்டிக் பைகளில் வழங்கப்படுகிறது. இதை குடிப்பதால் ஏற்படும் நோய்களுக்கு அப்பாவிகள் ஆளாவது எப்போது தடுக்கப்படும்...
2 / 5
சுமைதாங்கி...: புத்தக சுமையை குறைக்க அரசு முப்பருவ கல்வி முறையை புகுத்தினாலும், வீட்டில் அடுப்பு எரிய விறகை சுமக்கும் சிறார். இடம்: திருப்புவனம், மேலவெள்ளூர்.
3 / 5
இயற்கையின் அழிவு...: பொள்ளாச்சி அடுத்த நெகமம் பகுதியில், வறட்சியால் தண்ணீர் இன்றி குளம் வறண்டு காணப்படுகிறது. தென்னை விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதியில், மரங்கள் வெட்டப்பட்டு "லே-அவுட்'டாக மாறுகிறது. அழிக்கப்பட்ட தென்னை மரங்களின் அடிபாகம் குளத்தில் போடப்பட்டுள்ளன.
4 / 5
தர்பூசணி வரும் முன்னே...: கோடை காலம் துவங்கும் முன்னரே, கோவையில் தர்பூசணி பழ சீசன் துவங்கிவிட்டது. இடம்: கூட்ஷெட் ரோடு.
5 / 5
அரங்கேற்றம்...: கோவை, லலித் கலாஷேத்ரா சார்பில், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.
Advertisement