நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

30-Jan-2013
1 / 5
ஆள் பாதி...: 'பேஷன் எக்லட் - 2013' நிகழ்ச்சி, திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடந்தது. காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பேஷன் துறை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவியர் வடிவமைத்து, தயாரித்த, பல்வேறு விதமான ஆடைகளை, முதலாமாண்டு மாணவியர் அணிந்து வந்தனர்.
2 / 5
காதல் மொழி...: பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு மத்தியில், பசுமை மரக்கிளையில் அமர்ந்து காதல் மொழிப்பேசும் இந்த பறவைகளின் பார்வை கோவை அழகை ரசிக்கிறதா ? இல்லை மழை பொழிவை எதிர்பார்க்கிறதா ? இடம்: பீளமேடு, விமான நிலையம்.
3 / 5
சாகச வீராங்கனைகள்...: பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் சாகசம் செய்த வீராங்கனைகள்.
4 / 5
ரகசிய வசியம்...: இதை பாடாத கவிஞன் இல்லை. புதுக்கவிஞனின் எழுத்துக்களுக்கு பிடித்த வாசமுல்லை. காதில் ரகசியம்... தேன் இதற்கு அவசியம். பார்க்கும் போது நமக்கும் வைக்கிறது வசியம். இடம்:உடுமலை.
5 / 5
சாதனை முயற்சி...: கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும், காந்தி உலக மையம் சார்பில், சாதனை முயற்சியாக, இன்று சென்னை மெரீனா கடற்கரை சாலையில், 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள், காந்தியடிகள் வேடமிட்டு ஊர்வலமாக வர உள்ளனர். அதற்காக, கும்மிடிப்பூண்டியில், 40 நிமிடத்தில், 1,015 பள்ளி குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கப்பட்டது.
Advertisement