நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

31-Jan-2013
1 / 5
கலை... அழகு...: அன்னூர் நவபாரத் பள்ளி ஆண்டு விழாவில், மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது.
2 / 5
இதுதான் மோதலோ..:: நாங்கள் அனல் பறக்க மோதினால், புழு(பீ)தியையும் கிளப்புவோம்ல... இடம்: விருதுநகர் பாண்டியன் நகர்.
3 / 5
யோகா போட்டி...: உடுமலை சீனிவாச பப்ளிக் பள்ளியில், முதலாமாண்டு பள்ளி விளையாட்டு விழா நடந்தது. இதில் யோகா செய்து அசத்திய மாணவர்கள்.
4 / 5
தண்ணீர்... தண்ணீர்...: பொள்ளாச்சி தாலுகாவில், கடும் வெயில் வாட்டி வதைப்பதால், நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. இதனால், மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டியில், ஊற்று நீரை பாத்திரத்தில் பிடித்து சிறிது, சிறிதாக சேகரித்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
5 / 5
யானையின் தேடல்...: வானம் தெளித்த வைரக் காசுகளை தேடி, ஒற்றையாய் வந்தது யானை. பசுமையை தேடி ஒரு பக்கம், தனக்கு துணை இல்லையே என்ற சுமை ஒரு பக்கம் இருந்தாலும், அதையெல்லாம் தணித்திருக்கும் இந்த வானத்தின் கொடை. அழட்டும் வானம்... தயவு செய்து அதன் கண்ணீரை துடைக்க முற்பட வேண்டாம். இடம்: சிறுமுகை அடுத்த பெத்திகுட்டை, பவானிசாகர் அணை.
Advertisement