நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

02-Feb-2013
1 / 5
குளியல்... !: சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில் வனத்துறைசார்பாக அமைப்பட்டுள்ள தண்ணீர் குட்டையில் யானைகள் குளிக்க முடியவில்லை.மேலே நின்று தண்ணீர் குடித்துவிட்டு, தன்மீது தண்ணீ ரை இரைத்துக் கொள்ளும் யானைகள்.
2 / 5
அவலம்: அரசால் வழங்கப்பட்ட இலவச ஆடுகசாப்புகடைக்கு விற்பனைக்கு வந்தது .இடம்:விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர்.
3 / 5
வரப்பு உயர பிராத்திப்போம்: வரப்புயரநீர் உயரும். நீருயர நெல் உயரும். நெல் உயரகுடி உயரும். குடிஉயர கோன் உயரு ம்...! இங்கு எல்லாம் தாழ்ந்துகிடப்பதுடன், கழிவு நீர் தேங்கி துர்நாற்றத்துடன் உள்ளது. இ டம்: காவிரிஆறு, ஈரோடு.
4 / 5
துவக்கி வைப்பு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டையில் நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான நேற்று பாவு ஓடும் ஆலைக்கு (சைசிங் ஆலை) கற்பூர தீபாரதனை காண்பித்து தொழிலை துவக்கி வைக்கிறார்.
5 / 5
தொடரும் தொங்கல் பயணம்: சென்னையில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த, நான்குமாணவர்கள் லாரி மோதி பலியான சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும்போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்பின், வழக்கம்போல் விட்டு விட்டனர்.திருப்பூர் காலேஜ் ரோடு வழியாக சென்ற பஸ் ஒன்றில், தொங்கியபடி சென்றமாணவர்கள்.
Advertisement