நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

03-Feb-2013
1 / 5
வானம் ஏக்கப்படும்: வானம்கூடசற்றுஏக்கப்படும்; தரைக்கு உரம்கொடுத்தாலும், மலர்களுடன் பேசவில்லையே என்று .இருந்தாலும், நட்சத்திரப்பூக்கள் இருக்கிறதே என்று ஆறுதல் கொள்ளத்தான் செய்யு ம். வானத்தின்ஆனந்தக் கண்ணீரால் தானே மலர்களும், மனங்களும் துளி ர்க்கின்றன. இடம்:தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக வாயில்.
2 / 5
அவசரநிலையில்: சென்னை ஓமந்தூரார் அரசினர்தோட்டத்தில்,கட்டப்பட்டபுதியதலைமை செயலகத்தில் தற்போது பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இதன் முன்புறம்,நீலம் புயலின்போது விழுந்தமரத்தைகூட அகற்றாமல், மருத்துவமனையை அவசரநிலையில் திறந்து செயல் படுத்தி வருகின்றனர்.
3 / 5
தண்ணீரைதேடி: மழையில்லாமல் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கண்மாய்கள் காய்ந்துவறண்டு காணப்படுகின்றன. மேய்ச்சல் நிலத்தில்சிறிய அளவில்கூட புற்கள் இல்லாததால் தண்ணீரை தேடிஅலையும் ஆடுகள். இடம்:சிவகங்கைஅருகே இளங்குடிபட்டிகண்மாய்.
4 / 5
அவ்வளவுஅவசரமா?: ராமேஸ்வரம் பாம்பன் சாலைபாலத்தில், இரும்புசாரம் அமைப்பதற்கு முன்பே, ஆபத்தை விø லக்குவாங்கும் வகையில்,டூவீலரில்வந்தவர் ள் சாலையை கடந்து சென்றனர்.
5 / 5
தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி...!: எங்கள் காலம் என்னோடு போகட்டும்... உன் காலம் கல்வியறிவோடு வளமாக மாறட்டும்...! பார்க், பீச்சுக்கு கூட்டிட்டு போங்க, பீசா, பர்கர், ஸ்பிரிங் ரோல் வாங்கி கொடுங்கனு, பெற்றோர்களின் பாக்கெட்டை காலி செய்யும் குழந்தைகளுக்கு மத்தியில், ஈரோடு நீதிமன்றம் எதிரே சாலை ஓரத்தில் டீ கடை நடத்தி வரும் தந்தைக்கு உதவியாகவும், ஓய்வு நேரத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கும், நஞ்சப்பகவுண்டன் வலசு மாநகராட்சி பள்ளி மாணவன் குணசேகரன். ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கும், பொறுப்பை கற்று கொடுத்த தந்தைக்கும் பாராட்டுக்கள்.
Advertisement