நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

04-Feb-2013
1 / 5
இது ஒரு பொன் மாலைப்பொழுது: அந்திசாயும் மாலைப் பொழுதினில் இப்படி பாம்பன் பாலத்தின் தூண்களுக்கிடையே மறையும் கதிரவன் அழகு தனி தான்.'
2 / 5
மலர்களே...மலர்களே...:: விருதுநகர் மாவட்டத்தில் மழை பொய்த்தாலும், நிலத்தடி நீர் கைகொடுத்ததால், பூத்து குலுங்குகிறதோ செண்டு பூக்கள். இடம்:மல்லாங்கிணர்.
3 / 5
கருவை காக்க எறும்பின் வளைகாப்பு: எறும்புகள் ஈன்ற முட்டைகளை, எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவும், சுற்றிலும் பூச்சிகள் சிக்கி கொள்ளும் வகையிலும் வலை அமைத்து, தீவிர கண்காணிப்பில் உள்ள எறும்பின் பாசத்தை என்னவென்று சொல்வது!இடம்: ஈரோடு.
4 / 5
நீங்க அந்த பக்கம்; நாங்க இந்த பக்கம்: ஊட்டியில் தி.மு.க.-அ.தி.மு.க., சார்பில்,அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காபிஹவுஸ் சந்திப்பு பகுதிகம்பத்தில் இருபக்கமும், அண்ணாதுரையின் "போட்டோ', தி.மு.க.,வின் இரு கோஷ்டிகள் சார்பில் தனித்தனியாக வைக்கப்பட்டு இருந்தது.
5 / 5
ஆவேசமும், பாதுகாப்பும்!: திருப்பூர்வெள்ளியங்காடு, வள்ளலார் நகர் பகுதியில், புதிதாக திறக்கப்பட்ட, "டாஸ்மாக்' மதுக்கடையை, வேறிடத்துக்கு மாற்றக்கோரி,அப்பகுதி பொதுமக்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். முதல் படம்:மதுக்கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.