நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

05-Feb-2013
1 / 5
ஆ.....பத்து: மழையின்றி, காவிரி வறண்டது. ஈரோடு உட்பட பல நகரங்களில் இப்போதே, நான்கு முதல், ஏழு நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மார்ச் முதல், ஜூலை வரையிலான கோடைக்கு முன், மாவட்ட நிர்வாகமும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீருக்கு வழி செய்யாவிட்டால் கோடை அனைவருக்கும் கொடுமையானதாகும். இடம்: பெருமாள் மலையில் இருந்து, பவானி கூடுதுறை காவிரி ஆறு.
2 / 5
அலகமாகும் வளைவுகள்: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கொண்டை ஊசி வளைவுகள்,தேனி மாவட்டம், போடியிலிருந்து மூணாறு செல்லும் தமிழக எல்லைக்கு உட்பட்ட போடிமெட்டு பகுதி. 18 அடி அகலம் கொண்ட இந்த ரோடு விரைவில் 24 அடியாக அகலப்படுத்தப்பட உள்ளது.'
3 / 5
நிறம் வேறுபட்டதாலா?: ஆடுகள் இரண்டும் விளையாடாமல், முட்டி மோதி பகையாடுவது, நிறம் வேறுபட்டதாலா? இடம்: மதுரை
4 / 5
குடைக்குள் கடை: தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குடைகளுக்குள் குடியேறியதோ இந்தகடைகள்... இடம்:விருதுநகர்.
5 / 5
என்று விடிவு காலம்: வயிற்று பாரத்தை தோளில் சுமக்கிறேன், தலை பாரத்தை தினசரி சுமக்கிறேன், தினமும் விடியும் காலம் தெரிகிறது, எனக்கு என்று தான் விடிவு காலம் பிறக்குமோ.,
Advertisement