நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

06-Feb-2013
1 / 5
அலைகழிக்கப்படும் மாற்று திறனாளிகள்: சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் தனிபிரிவில் மனு கொடுக்க வரும் மாற்றுத் திறனாளிகள்செல்ல, வழங்கப்பட்ட தள்ளு வண்டி எங்கே போனதுஎன, தெரியவில்லை. கஷ்டப்பட்டு படியில் ஏறி வரும்இவர்களை, "திரும்ப அந்த பக்கமாக வாங்க' என்றுஅலைக் கழிக்கும் போலீசார்.
2 / 5
போக்குவரத்து இடையூரா...: சட்டசபை கூட்டத் தொடர் துவங்கிய நாள் முதல், செய்தியாளர்கள் அறை முன், அவர்களது வாகனங்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க., பொருளாளரின் இந்த பெரிய வாகனம் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே.
3 / 5
காணிக்கை: பழநிகோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் நோட்டுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
4 / 5
விரட்டிய காளை: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தேவபட்டில் நடந்த மஞ்சுவிரட்டில்அவிழ்த்து விடப்பட்ட மாடு பார்வையாளர்களைவிரட்டி அடித்தது.
5 / 5
வான்வெளியில் ஏர் உழுத உழவன் யாரோ?: காவிரியும் கைவிரிக்க, வான்மழையும் கண்ணீர் விட பூமிதேசம் வறண்டு கிடக்க, வாழவழிதேடி விவசாயிகள் கூட்டம் வானகம் சென்று விட்டதை உணர்த்துகிறதோ இந்த படம்.இடம்: சேலம், மகாத்மாகாந்தி விளையாட்டு அரங்கம்.
Advertisement