நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

07-Feb-2013
1 / 5
வழி பிறந்தது !: கிழக்கே குளித்து எழுந்த வானின் நெற்றித் திலகம், வீட்டு ஜன்னல் கம்பிகளுக்கு தங்க முலாம் பூசி, இயற்கைகோடு இணைந்து பேசி,முகாரி பாட தயாராகி விட்டது மேற்கே. சந்திரனின் உதயத்துக்கு, இதோ பிறந்தது வழி. இடம்: பொள்ளாச்சி குள்ளக்காபாளையம்.
2 / 5
உதவியை தேடி...: திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் இருந்து,சென்னை, தலைமை செயலகத்துக்கு நேற்று வந்தஇந்த சிறுவன் ஜாபர் அலிக்கு இரண்டு வயது தான்ஆகிறது. அதற்குள் இந்த குழந்தைக்கு இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஓட்டலில் வேலைசெய்யும் இக்குழந்தையின் தந்தை, நிதி உதவி கேட்டுமுதல்வரை சந்திக்க, தலைமை செயலகம் வந்திருந்தார்.தனக்கு இருக்கும் பாதிப்பை அறியாமல், பொம்மைகார் ஓட்டி விளையாடி கொண்டிருந்த சிறுவன்.
3 / 5
துணிவே துணை!: டில்லியில் பஸ்சில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும்பள்ளி, கல்லூரி மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கோவை, அல்வேனியா பள்ளியில் பயிற்சி பெறும் மாணவியர்.
4 / 5
முக்காடு எதுக்கு...!: இதய தெய்வத்தை, இதயத்தில் சுமந்து வந்த, ராதாபுரம் தொகுதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன்.இவரை பின் தொடர்ந்து படம் எடுக்க முற்பட்டபோது, இதயத்தில் இருக்கும் இதய தெய்வத்தை, முதலில் கையைவைத்து மறைத்தார். தொடர்ந்து படம் எடுக்கவே, கையை பாக்கெட்டிலிருந்து எடுத்துவிட்டார். முழுக்கநனைஞ்சாச்சு... அப்புறம் முக்காடு எதுக்கு...!
5 / 5
அதிகாரிகளால் தார் போல மாறிய தண்ணீர்:: மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பொது நல அமைப்புக்கள் எல்லாம் தினம் தினம் "கவனிப்பால் கரைபடுவதால்' பாசனத்துக்கான தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் கருப்பு, பச்சை, நீலம் கலந்து தார் போல தண்ணீர் செல்கிறது.இடம்: காலிங்கராயன் வாய்க்கால், ஈரோடு.
Advertisement