நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

04-Apr-2013
1 / 5
கோடையில் ஒரு குளிர்ச்சி: சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் தவித்த ரஷ்யா நாட்டு சுற்றுலா இளம் பெண்கள். கடலில் ஆனந்தமாக, குட்டி குளியல் போட்டனர். இடம்: மண்டபம் பூங்கா அருகில்.
2 / 5
வாழ்வு தரும் வைகை: பாயும் வெள்ளத்தால் பயிர் சாகுபடிக்கு உதவிய வைகை, இன்று காயும் நிலைக்கு போனதால், சலவைத் தொழிலாளர்களுக்கு, வேட்டி, சேலைகளை உலர்த்த இடம் தந்து உதவுகிறதோ? இடம்: மதுரை விரகனூர்.
3 / 5
பச்சை நிறமே..பச்சை வெல்லமே.!: மதுரை தனிச்சியம் பகுதியில் வெல்லம் தயாரிக்க கொப்பரை ஆலையில் வேக வைக்கப்படும் கரும்புச்சாறு.
4 / 5
எச்சரிகை தேவை: அளவுக்கு மீறிய சரக்குகளை வாகனத்தில் கொண்டு செல்லக்கூடாது என்ற விதி ஒருபுறம் இருந்தாலும்,இப்படி எட்டி பார்க்கக்கூட வழியின்றி, அளவுக்கு மீறி அகலமான போர்டை பாதுகாப்பின்றி எடுத்துச் செல்வது விபத்திற்கு வழிவகுக்காதா? இடம்: தமிழ்ச்சங்கம் ரோடு.
5 / 5
ஜாலியா தூங்கலாம்: மாணவர்களுக்கு தொடர் விடுமுறை விட்டாச்சு. இனி நமக்கு ஜாலி தான் என்று காரைக்குடி அரசு ஐ.டி.ஐ.,முதல்வர் அலுவலக வாசலில், ஜாலியாக தூங்கும் நாய்.
Advertisement