நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

08-Apr-2013
1 / 5
தேவிக்கு நமஸ்காரம்: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் வரும் 12-ம் தேதி தூக்கத்திருவிழா நடைபெறுகிறது. குழந்தைகளை கைகளில் தாங்கிய படி 60 அடி தூக்கமரத்தில் தொங்கும் தூக்கக்காரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் கடலில் குளித்து கோயிலை சுற்றி நமஸ்காரம் செய்கின்றனர்.
2 / 5
உணவு கட்டுப்பாடு: உலக சுகாதார தினத்தையொட்டி கோவில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் நொறுக்குத்தீனிகளை எரிக்கும் விழிப்புணர்வு நிகழ்வை மேற்கொண்டனர்.
3 / 5
வீணாகும் குடிநீர்: மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு பரவலாக உள்ள நிலையில் பராமரிப்பு இல்லாததால் குடிநீர்வால்வில் நீர்கசிவு ஏற்படுகிறது. இடம்: பழநி- பாலசமுத்திரம் ரோடு .
4 / 5
என்ன ரகசியம் : என்ன ரகசியமோ இவைகளுக்குள்.. காதை கடிக்கின்றது காதல் கிளிகள்.இடம்: பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி.
5 / 5
"கழுகு' பார்வையில் கண்ணீர் காட்சி: திருச்சியில் அகண்ட காவிரியாய், கரை புரண்டோட வேண்டிய காவிரி ஆறு, கர்நாடக அரசின் ஏய்ப்பு, பருவமழை பொய்ப்பு காரணமாக, கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்ட பாலைவனமாய் காட்சியளிக்கிறது.
Advertisement