நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

21-Apr-2013
1 / 5
அவசரம் வேண்டாமே: விருதுநகர் ரயில்வே காலனி ஆளில்லா லெவல் கிராசிங் பகுதியில் ரயில் வரும்போது, இதுபோன்று வாகனத்தில் செல்வது, விபத்திற்கல்லவா வழிவகுக்கும்.
2 / 5
பூத்து குலுங்கும் பூக்கள்: ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்ந்துள்ள பல வண்ண மலர்கள், பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றன.
3 / 5
என்னங்க அப்படி பார்க்கிறீங்க: பலாப்பழ சீசன் ஆரம்பிச்சிருச்சுல, முதல்ல நாங்க டேஸ்ட் பார்க்கறோம்.... அப்பறம் தான் உங்களுக்கு.இடம்: கல்லாளு பழப்பண்ணை, மேட்டுப்பாளையம்.
4 / 5
கல்வியின் அவசியம்: கரூர் பஞ்சாயத்து யூனியன் காந்தியார் நடுநிலைப் பள்ளி சார்பில் தீவிர மாணவர் சேர்க்கை பேரணி வேலாயுதம் பாளையம் ரவுண்டானா பகுதியில் நடந்தது. கல்வியின் அவசியம் குறித்து மாணவ, மாணவியர் விழிப்புணர்வு வாசகங்களை வாசித்தபடி சென்றனர்.
5 / 5
உச்சி மண்டை "சுர்'ருங்குது: திருச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் கடுமையான வெயில் காரணமாக, மாநகரத்தில் ஆங்காங்கே உள்ள அடி பம்புகளில் தாகம் தீர்க்கும் மக்கள், வெயிலில் கிறுகிறுத்துப் போன தங்களது தலையையும் அப்படியே தண்ணீரில் நனைத்துக் கொள்கின்றனர்.
Advertisement