நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

23-Apr-2013
1 / 5
சபாஷ் அதிகாரிகள்: மதுரை புதூரில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்வதற்காக தோண்டிய பள்ளத்தில், தண்ணீர் வீணாகுவது குறித்து, தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர்.
2 / 5
வந்தாச்சு வைகை... வர்றாரு அழகரு...: ஏப்.,25ம் தேதி மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக, அழகர் கோவிலிலிருந்து இன்று மாலை புறப்படுகிறார் அழகர். ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், வைகையின் கரைகளை தொட்டு ஓடியது.
3 / 5
மனித நேயம்: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள, முதல்வர் தனி பிரிவில், மனு கொடுக்க வருபவர்களில், மாற்று திறனாளிகளே அதிகம். அவர்களை முதல்வர் தனி பிரிவுக்கு அழைத்து வந்து மனு கொடுக்க உதவும் பெண் போலீசார் பணி மகத்தானது. தஞ்சாவூர் மற்றும் அவினாசியிலிருந்து வந்த, கண் பார்வையற்ற இருவருக்கு மனு கொடுக்க உதவும் பெண் போலீஸ்.
4 / 5
சைக்கிள் விழிப்புணர்பு: சைக்கிள் உபயோகத்தின் அவசியத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, புதுச்சேரி வாலிபர் உருவாக்கிய பிரம்பு சைக்கிள். இது, அழகுக்காக மட்டுமே; ஓடாது.
5 / 5
எச்சரிக்கை அவசியம்: விருதுநகர் ரயில்வே காலனி ஆளில்லா லெவல் கிராசிங் பகுதியில், ஆபத்தான முறையில் தட்டு தடுமாறி வரும் வாகனங்கள்.
Advertisement